களுக்கு உருவாக்கித்தருவது தான் கல்வியின் நோக்கமாக இருக்க வேண்டும். பிஞ்சு நெஞ்சங்களில் தேர்வு பயத்தை ஏற்படுத்துவது என்பது எவ்விதத்திலும் ஏற்க இயலாதது. குழந்தைகளுக்கு கற்றல் சுகமானதாக இருக்க வேண்டும். சுமையானதாக இருக்கக்கூடாது. அப்போதுதான் கல்வியின் மீதும், கற்றலின் மீதும் குழந்தைகளுக்கு ஈர்ப்பு உருவாகும். 5, 8 ஆம் வகுப்புகளுக்குப் பொதுத்தேர்வு வைப்பதன் மூலம் குழந்தைகளுக்குக் கல்வியின் மீதும், கற்றலின் மீதும் சலிப்பும், வெறுப்பும் ஏற்படவே வழிவகுக்கும்.10, 12 ஆம் வகுப்பு மாணவர்களைக் கூட தேர்வு பயம் எந்த அளவிற்கு ஆட்டிப் படைக்கிறது என்பது அனைவருக்கும் தெரியும். அவ்வாறு இருக்கும்போது மழலைமனம் மாறாத 5, 8ஆம் வகுப்பு மாணவர்களுக்குப் பொதுத்தேர்வு மிகுந்த அச்சத்தையும், சுமையையும், மனஉளைச்ச லையும் ஏற்படுத்தும் என்பது தெளிவு.பொதுத்தேர்வு இல்லாத நிலையிலேயே தொடக்கக்கல்வி நிலையில் இடைநிற்றல் ஏற்பட்டு மாணவர்களது கல்வி தடைபட்டு விடக்கூடாது என்பதற்காகவே 8 ஆம் வகுப்புவரை அனைவருக்கும் தேர்ச்சி என்ற நிலை கொண்டுவரப்பட்டது.
இடைநிற்றல் தீவிரமாகும்
ஆனால், இன்று தமிழக அரசு 5 ஆம் வகுப்பிலேயே பொதுத்தேர்வைக் கொண்டுவருவது குழந்தைகளை குறிப்பாக,ஏழை, எளிய கிராமப்புறக் குழந்தை களை கல்விக்கூடங்களிலிருந்து வெளியேற்றுவதற்கு உதவி செய்வதாக அமைந்து விடும். பொதுத்தேர்வு என்று வரும்பொழுது அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் ஏழைக் குழந்தைளே அதிகம்பாதிக்கப்பட்டு படிப்பை பாதியில் விட்டு விட்டு மாணவச் செல்வங்கள் குழந்தை தொழிலாளர்களாகவும், கூலித் தொழிலாளர் களாகவும் மாறும் நிலை உருவாகும். இது மிகப்பெரும் சமூக அநீதியை உருவாக்கிடும் என்பதை சுட்டிக்காட்ட விரும்புகிறோம்.
உச்சக்கட்ட குழப்பம்
தமிழக அரசு கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு மாணவர்களின் புத்தகச்சுமையைக் குறைப்பதற்காகவும், பாடச்சுமையைக் குறைப்பதற்காகவும் முப்பருவ முறையைக் கொண்டுவந்தது. 5 புத்தகங்கள் 2 புத்தகங்களாக குறைக்கப்பட்டது. இதனால் ஆண்டுமுழுவதும் படிக்க வேண்டிய பாடங்களை மூன்று பருவங்களாய்ப் பிரித்துப் படிக்கும்நிலை தற்போது நடைமுறையில் உள்ளது.ஒரு பருவத்தில் படித்த பாடங்கள் அந்தப்பருவத்தேர்வோடு முடிந்துவிடும். அடுத்தபருவத்திற்கு வேறு புத்தகங்கள் வந்துவிடும். ஆனால், தமிழக அரசு தற்போது அறிவித்துள்ள பொதுத்தேர்வில் 5, 8ஆம் வகுப்புகளுக்கு மூன்று பருவங்களிலிருந்தும் வினாக்கள் கேட்கப்படும் என்று அறிவித்துள்ளது உச்சக்கட்ட குழப்பத்தை யும் தேவையற்ற முரண்பாட்டையும் ஏற்படுத்தியுள்ளது.
கைவிடுக!
எனவே, தமிழகத்தில் உள்ள நீண்ட கல்வி மரபிற்கு முரணாக, 5 மற்றும் 8ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத் தேர்வு முறையை அமலாக்கி, மாணவர்களையும், பெற்றோர்களையும் அச்சத்திற்குள்ளாக்கும் நடைமுறையை கைவிட வேண்டும் என வலியுறுத்துகிறோம். இப்பொதுத்தேர்வு முறை மாணவர்களின் இடைநிற்றலுக்கும், படிப்பை துறப்பதற்கும் காரணமாகி விடக்கூடாது எனவும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலக்குழுவின் சார்பில் தமிழக அரசை கேட்டுக் கொள்கிறோம்.இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.