சென்னை,அக்.12- கும்மிடிப்பூண்டி மார்க் கத்தில் கவரைப்பேட்டை அருகே வெள்ளிக்கிழமை (அக்.11) இரவு நின்று கொண் டிருந்த சரக்கு ரயில் மீது பாக்மதி விரைவு பயணிகள் ரயில் மோதி விபத்துக்குள் ளானது. இதில் சுமார் 13 பெட்டிகள் வரை தடம் புரண்டதில் 19 பேர் காய மடைந்தனர்.
கர்நாடக மாநிலம் மைசூருவில் இருந்து பீகார் மாநிலம் தர்பங்காவுக்கு வெள்ளிக்கிழமை காலை 10.30 மணிக்கு பாக்மதி அதி விரைவு ரயில் புறப்பட்டது. இந்த ரயில் ஜோலார் பேட்டை, அரக்கோணம், பெரம்பூர் வழியாக கும்மி டிப்பூண்டி மார்க்கத்தில் வெள்ளிக்கிழமை இரவு சென்று கொண்டிருந்தது.
இரவு 8.27 மணி அளவில் திருவள்ளூர் மாவட்டம் கவ ரைப்பேட்டை ரயில் நிலை யம் அருகே சென்றபோது, அங்கு ஏற்கெனவே நின்று கொண்டிருந்த சரக்கு ரயில் மீது திடீரென மோதியது. இதில் 13 பெட்டிகள் வரை தடம்புரண்டது. இந்த விபத்தில், உயிரிழப்பு ஏதும் ஏற்படவில்லை.
விபத்து குறித்து ரயில்வே கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் கொடுக் கப்பட்டது. ரயில்வே அதி காரிகள், திருவள்ளூர் மாவட்ட அரசு அதிகாரிகள், ரயில்வே போலீஸார், ஆர்.பி,எஃப். போலீஸார் சம்பவ இடத்திற்கு வந்து மீட்புப் பணியில் ஈடுபட்டனர். தடம்புரண்ட பெட்டிகளில் இருந்து காயமடைந்த பய ணிகளை மீட்டு, பொன்னேரி, கும்மிடிப்பூண்டி மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்த னர். சிலர் சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையிலும் அனுமதிக்கப்பட்டனர்.
மீட்புப்பணியில் வாலிபர்-விவசாயிகள் சங்கத்தினர்
விபத்து நிகழ்ந்த பகுதி யின் அருகே உள்ள கிராமங்க ளில் இருந்து இந்திய ஜனநா யக வாலிபர் சங்கத்தினரும் விவசாயிகள் சங்கத்தினரும் மீட்பு பணியில் ஈடுபட்டனர்.
விபத்து நடைபெற்ற இடத்தை அமைச்சர் நாசர், திருவள்ளூர் மாவட்ட ஆட்சி யர் பிரபு சங்கர் மற்றும் அதி காரிகள் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டனர்.
மோப்ப நாய்களை கொண்டு தடம்புரண்ட ரயில் களில் யாரேனும் சிக்கி இருக்கிறார்கள் என தேடு தல் பணி நடைபெற்றது. விபத்து நடைபெற்ற இடத்தி ற்கு அருகே உள்ள ஊர் மக் கள் பயணிகளுக்கு தண்ணீர், பிஸ்கட் பாக்கெட் போன்ற வற்றை வழங்கினர்.
உயர்மட்ட விசாரணை
விபத்து குறித்து உயர் மட்ட விசாரணை மேற்கொள் ளப்படும் என தெற்கு ரயில்வே தலைமை பொது மேலாளர் ஆர்.பி.சிங் கூறி னார்.
விபத்து நடந்த இடத்தை பார்வையிட்ட பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறுகையில், பாக்மதி விரைவு ரயில் கவரைப் பேட்டை ரயில் நிலையம் அருகே பிரதான பாதையில் வருவதற்காக, பச்சை நிற சிக்னல் கொடுக்கப்பட்டி ருந்தது. ஆனால், அருகே வந்தபோது, மிகப்பெரிய அதிர்வு ஏற்பட்டு, கிளை பாதையில் (லூப் லைனில்) சென்று, அங்கு நின்று கொண்டிருந்த சரக்கு ரயி லில் மோதி விபத்துக்குள் ளானது. இந்த விபத்து குறித்து விசாரிக்க, 5 உயர திகாரிகளை கொண்ட உயர் மட்டக் குழு அமைக்கப்பட் டுள்ளது. இக்குழு ஆய்வு செய்து, ரயில்வே துறையி டம் அறிக்கை சமர்ப்பிக்க உள்ளது என்று தெரி வித்தார்.
விசாரணை குழுவில் 5 உயர் அதிகாரிகள்
ரயில் விபத்து தொடர் பாக விசாரணை நடத்த 5 உயரதிகாரிகளைக் கொண்ட குழுவை தெற்கு ரயில்வே அமைத்துள்ளது. இதில் இயந்திரவியல், இயக்கவியல், தண்டவாள பராமரிப்பு துறை, சிக்னல் மற்றும் தொலைத்தொடர்பு, ரயில்வே பாதுகாப்பு பிரிவு ஆகிய துறைகளை சேர்ந்த உயரதிகாரிகள் இடம்பெற் றுள்ளனர். விபத்துக்கு சிக்னல் தொழில் நுட்ப பிரச்ச னையா அல்லது மனித தவறா, வேறு ஏதும் காரண மா என்ற கோணத்தில் விசாரணை மேற்கொண்டு அறிக்கை அளிக்க உள்ள னர். மேலும், ரயில்வே போலீ ஸாரும் வழக்குப் பதிந்து, விசாரணையை தொடங்கி உள்ளனர்.
ரயில் விபத்தையடுத்து ரயில் பாதை மோசமாக சேத மடைந்துள்ளது. சுமார் 13 பெட்டிகள் தடம் புரண்ட நிலையில் அதில் சுமார் 7 பெட்டிகள் ரயில் பாதையின் குறுக்கே உள்ளது. அதனை கிரேன் மூலம் ரயில்வே ஊழி யர்கள் அகற்றினர். நள்ளிரவு வரை இந்த மீட்புப்பணிகள் நடைபெற்றன. பெட்டிகள் ஒன்றின் மீது ஒன்று ஏறி உள்ள காரணத்தால் வெல்டிங் செய்து அவை துண்டு துண்டுகளாக்கி அகற்றப்பட்டன.
18 ரயில்கள் ரத்து
சீரமைப்பு பணிகள் முடிவடைந்து ஞாயிறன்று பிற்பகல் இப்பாதையில் ரயில்கள் வழக்கம் போல இயங்கும் என எதிர்பார்க்கப் படுகிறது. விபத்து காரண மாக இரு மார்க்கத்திலும் ரயில் சேவை பாதிக்கப் பட்டுள்ளது. சுமார் 18 ரயில் கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
மாற்றுப் பாதையில் வட இந்திய ரயில்கள்
விபத்து காரணமாக சென்னை – கூடூர் வழியாக தில்லி, கொல்கத்தா, பாட் னா, காத்தி. விசாகப்பட்டி னம் உள்ளிட்ட பல ஊர்க ளுக்கு செல்லும் ரயில்கள் மாற்றுப்பாதையில் இயக் கப்பட்டன. அதாவது சென்னை சென்ட்ரல், எழும் பூர் ரயில் நிலையங்களில் இருந்து வட மாநிலங்களு க்கு செல்லும் ரயில்கள் அரக் கோணம், ரேணிகுண்டா வழியாக திருப்பிவிடப் பட்டுள்ளது.
சிறப்பு ரயிலில் அனுப்பிவைப்பு
விபத்துக்குள்ளான ரயிலில் பயணம் செய்த பயணிகள் கவரைப்பேட்டை அருகே திருமண மண்ட பத்தில் தங்க வைக்கப்பட்டி ருந்தனர். அவர்கள் பேருந்து கள் மூலமாக, பொன்னேரி நிலையத்துக்கு அழைத்து வரப்பட்டனர். அங்கிருந்து இரண்டு மின்சார ரயில் கள் மூலமாக சென்ட்ரலுக்கு அழைத்து வரப்பட்டு சனிக்கிழமை அதிகாலை சிறப்பு ரயிலில் தர்பங்கா வுக்கு அனுப்பி வைக்கப் பட்டனர்.
13 ரயில்வே ஊழியர்களுக்கு சம்மன்
கவரைப்பேட்டையில் நிகழ்ந்த ரயில் விபத்து தொடர்பாக 13 ரயில்வே ஊழியர்களுக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. சென் னையில் உள்ள தெற்கு ரயில்வே அலுவலகத்தில் விசாரணைக்கு ஆஜராகு மாறு சென்னை கோட்ட மேலாளர் சம்மன் அனுப்பி யுள்ளார்.
ரயில்வே அமைச்சர் பதவி விலக கோரிக்கை
நாட்டில் ரயில் விபத்துக் கள் அதிகரித்திருப்பதால் தார்மீக பொறுப்பேற்று ரயில்வே அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் பதவி விலகவேண்டும் என்று தமிழ் நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் செல்வப்பெருந்த கை கூறியுள்ளார்.
ரயில்சேவை தொடக்கம்
தண்டவாள சீரமைப்பு கள் முடிவடைந்து 24 மணி நேரத்திற்கு பிறகு சனிக் கிழமை இரவில் கவரைப் பேட்டை மார்க்கத்தில் ரயில் சேவை தொடங்கியது.
ஆறு நாட்களுக்கு ஒரு விபத்து
நிம்மதி இல்லாத ரயில் பயணத்தை உருவாக்கும் ரயில்வே துறை
சு.வெங்கடேசன் எம்.பி., விமர்சனம்
மதுரை,அக்.12- நிம்மதி இல்லாத ரயில் பயணத்தை உரு வாக்கும் சூழலை நோக்கி ரயில்வே துறை தள்ளுவதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் மதுரை மக்களவை உறுப்பினர் சு.வெங்க டேசன் விமர்சித்துள்ளார்.
இதுகுறித்து அவர் தனது எக்ஸ் வலைதள பதிவில், ஆறு நாட்களுக்கு ஒரு விபத்து நடந்து கொண்டிருக்கிறது. ஒவ்வொரு விபத்தின் போதும் நடைபெறுவது ஆய்வுகள் மட்டுமே.ஆய்வின் முடிவுகளைக் கொண்டு தீர்வுகளை உருவாக்குவது எப்போது?
உயிர்சேதம் இல்லாத பெரும் நிம்மதி இருந்தாலும், ஒவ்வொரு ரயில் பயணத்தை யும் நிம்மதி இல்லாத பதற்றத்தை நோக்கி தள்ளும் சூழலில் இருந்து மீள ரயில்வே துறை என்ன தான் செய்யப்போகிறது? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.