tamilnadu

img

மீனவர்கள் இல்லாமல் வெறிச்சோடிய துறைமுகம்

மீனவர்கள் இல்லாமல் வெறிச்சோடிய துறைமுகம் 

கடலூர் மீன் பிடி துறைமுகத்திலிருந்து நாள்தோறும் ஆயிரத்துக்கும் அதிகமான மீனவர்கள், நூற்றுக்கும் மேற்பட்ட  விசை மற்றும் பைபர் படகுகளில் ஆழ்கடலுக்கு சென்று மீன் பிடித்து வருவது வழக்கம். மூன்று தினங்களுக்கு முன்பு வங்க கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவானது. இதன் காரணமாக  கடல் பகுதியில் 60 கிலோ மீட்டர் வேகத்தில் பலத்தை சூறாவளி காற்று வீசக்கூடும் என வானிலை மையம் எச்சரித்தது. இதனை அடுத்து கடலூர் மீன்வளத்துறை அதிகாரி மீனவர்கள் மறு அறிவிப்பு வரும் வரை மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என அறிவித்திருந்தார். அதன்படி திங்கள்கிழமை முதல் கடலூர் துறைமுகத்தில் இருந்து மீனவர்கள் யாரும் கடலுக்கு மீன் பிடிக்க செல்லவில்லை. கடலில்4 முதல் 5 நாட்கள் வரை தங்கி மீன் பிடிக்கும் ஒரு சில மீனவர்கள் மட்டும் கடலில் உள்ளனர். மீன்வளத்துறை சார்பில் அவர்களும் உடனடியாக கரைக்கு திரும்பும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளதாக மீன்வளத்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.மீனவர்கள் யாரும் மீன்பிடிக்க செல்லாததால், கடலூர் மீன் பிடி துறைமுகம் வெறிச்சோடி காணப்பட்டது.