tamilnadu

img

பூமிக்கு ஒரு சாம்பியன்

பூமிக்கு ஒரு சாம்பியன்

கென்யா தலைநகர் நைரோபியில் சமீபத்தில் நடந்த விழாவில் இந்திய ஆட்சிப் பணி அலுவலரான சுப்ரியா சாகு (Supriya Sahu) ஐநா சுற்றுச்சூழல் திட்டத்தின் சார்பில் 2025 ஆம் ஆண்டிற்கான பூமிக்கு ஒரு சாம்பியன் விருது வழங்கப்பட்டு கௌரவிக்கப்பட்டார். பிளாஸ்டிக் விழிப்புணர்வு, வன உயிரினங்களின் பாதுகாப்பு உட்பட நாட்டின் மிக முக்கிய சூழல் பிரச்சனைகளுக்கு தீர்வு காண தலைமைப் பொறுப்பேற்று நீண்ட காலம் மேற்கொண்ட பணிகளுக்காக இந்த விருது அவருக்கு வழங்கப்பட்டுள்ளது. நம்பிக்கை ஒளி வீசும்  குழந்தைகளின் கண்கள் “அலையாத்திக் காடுகளின் தூய்மைப் பணிகளை தங்கள் சொந்த வேலையைப் போல  செய்த கிராம மக்களிடம் இருந்தே நான் உள்ளு ணர்வு பெற்றேன். மேலும் சிறு குழந்தை களின் பளபளக்கும் கண்களில் பளிச்சிடும் நம்பிக்கை வீசும் ஒளியினால் நான் தூண்டப் பட்டேன்” என்று தனது பணிகள் பற்றி பேசும்போது சாகு கூறுகிறார். கடந்த நான்கரை ஆண்டுகளாக அவர் தமி ழக அரசின் காலநிலை மாற்றம், சுற்றுச்சூழல்  மற்றும் வனத் துறையின் கூடுதல் செயலா ளராகப் பணிபுரிகிறார். இயற்கையின் மீதான ஆர்வம் அவரது சிறு வயதில் இருந்தே தொடங்கியது. தந்தையின் தொழிலுக்காக குடும்பம் நாடு முழுவதும் பயணம் செய்த போது இந்த ஆர்வம் அதிகரித்தது. யானைகள் மீது அளவற்ற ஆர்வம் வைத்  துள்ள அவருடைய சமூக ஊடகப் பக்கங்கள்  முழுவதும் யானை பற்றிய செய்திகள் நிறைந் துள்ளன. “யானைகள் நமக்கு குடும்பப் பாசத்  தையும் தலைமைப் பண்பையும் கற்றுத் தரு கின்றன” என்று அவர் கூறுகிறார். தனது முப்பதாண்டு கால பொது வாழ்வில்  இந்தியாவின் செழுமையான உயிர்ப் பன்மயத் தன்மையின் மீது பெரும் ஆர்வத்தை வளர்த்துக்கொண்டார்.  அதே சமயம் பொறுப்பற்ற மனிதர்களால் சூழலுக்கு ஏற்பட்டுவரும் அழிவையும் அவர் உணர்ந்தார். “பிளாஸ்டிக் குப்பைகளை விலங்குகள் உண்பதை நான் கவனித்தேன். நாம் வாழும் பூமி மோசமான நிலையை நோக்கி  சென்றுகொண்டிருப்பதை உணர்ந்தேன். அது என் வாழ்வின் ஒரு திருப்புமுனையாக அமைந்தது” என்று நீலகிரி மாவட்ட ஆட்சித் தலைவராக இருந்தபோது தனக்கு ஏற்பட்ட அனுபவத்தை அவர் நினைவுகூர்கிறார். தமிழ்நாடு முழுவதும் சூழல் மீட்பு மற்றும் அதி தீவிர வெப்பநிலையைக் குறைக்க அவர்  மேற்கொண்ட நடவடிக்கைகளுக்காக அவ ருக்கு இந்த உயரிய ஐநா சுற்றுச்சூழல் விருது  வழங்கப்பட்டுள்ளது. சிறந்த மேலாண்மை மற்றும் மலிவான, உயர்ந்த தொழில்நுட்ப உதவி யுடன் சுற்றுச்சூழல் பிரச்சனைகளுக்கு எவ்வாறு  இயற்கை வழியில் தீர்வு காணலாம் என்பதை அவர் எடுத்துக்காட்டினார். ஆபரேஷன் ப்ளூ மவுண்ட்டைன் இந்த நடவடிக்கைகள் பலவீனமான சமூ கங்களை பாதிப்புகளில் இருந்து காப்பாற்ற உதவியுள்ளன. இதனால் பசுமைக் குடில் வாயுக்களின் உமிழ்வு குறைந்தது. இந்தச் செயல்கள் பத்துலட்சக் கணக்கானோர் பசுமை  பாதுகாப்புப் பணியில் ஈடுபடக் காரணமாக அமைந்தது. அறிவியல் பூர்வமான முறையில்,  சமூக ஒத்துழைப்புடன் காலநிலை பிரச்ச னைக்கு தீர்வு காணமுடிந்ததன் மூலம் தமிழ்நாடு  ஒரு முன்னணி மாநிலமாக மாற அவரது செயல்பாடுகள் உதவின. அவரது செயல்கள் மூலம் நீடித்த நிலை யான வளர்ச்சிக்கு உதவும் வகையில் வனங்க ளின் பரப்பு அதிகரித்தது. இதனால் காலநிலை மாற்றத்தினால் ஏற்படும் அவதிகளில் இருந்து 1.2 கோடி மக்கள் பாதுகாக்கப்பட்டனர். நீலகிரி  மாவட்டத்தின் ஆட்சித் தலைவராக இருந்த போது 2000 ஆம் ஆண்டில் அவர் ஒரு முறை மட்டுமே பயன்படுத்தக்கூடிய பிளாஸ்டிக்கை ஒழிக்கும் நோக்கத்துடன் ஆபரேஷன் ப்ளூ மவுண்டைன் (Operation Blue Mountain) என்ற இயக்கத்தை தொடங்கினார். சமீபத்தில் அவர் கடலோரப் பாதுகாப்பு மற்றும் நகரப் பகுதி குளிரூட்டும் வசதிக்கான பல்வேறு திட்டங்களுக்காக தமிழ்நாடு பசுமை  காலநிலை கம்பெனி (Tamil Nadu Green  Climate Company) என்ற இலாப நோக்க மற்ற, தொண்டு நிறுவனத்தை தொடங்கினார். 200 பள்ளிகளில் கூரையைக் குளிரூட்ட வகை செய்யும் திட்டத்தை (cool roof project) தொடங்கினார். 10 கோடி மில்லியன் மரங்கள்  நடும் திட்டத்திற்கு பொறுப்பேற்றுச் செயல்  பட்டார். தமிழ்நாட்டில் 65 புதிய பாது காக்கப்பட்ட வனப் பகுதிகளை ஏற்படுத்தி னார். அவரது தலைமையின் கீழ் மாநிலத்தின் அலையாத்திக் காடுகளின் பரப்பு இரண்டு  மடங்காக அதிகரித்து. இதனால் ஈர நிலங்க ளின் எண்ணிக்கை ஒன்றில் இருந்து பன்னி ரண்டாக அதிகரித்தது. வன உயிரினங்கள் பாதுகாப்பிற்காக 6 கோடி டாலர் திட்டத்தை தொடங்கினார். சென்னையில் “முதலில் இயற்கை” என்ற பெயரில் நகரத் திட்டமிட லிற்கான புதிய முயற்சிகளை ஆரம்பித்தார். மகத்தான அவரது சுற்றுச்சூழல் பணிகள் என்ற  மகுடத்தில் ஐநாவின் இந்த ”பூமிக்கு ஒரு சாம்பி யன் விருது” ஒளி வீசும் பொன்னிறகு என்பதில் ஐயமில்லை.