கொசஸ்தலை ஆறும் சூழல் பாதிப்பும் ஆற்றை பாதுகாப்பதற்கான ஆய்வறிக்கையை திருவொற்றியூர் விவேகானந்தா வித்யாலயா பள்ளியில் 8 ஆம் வகுப்பு பயிலும் மாணவர் அஸ்வஜித் ஹரிஹரன் தயாரித்துள்ளார். தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பாக தேர்ந்தெடுக்கப்பட்ட இந்த ஆய்வறிக்கையை அமைச்சர் ஜெயக்குமாரிடம் அம் மாணவர் சமர்ப்பித்தார். மாணவனை பாராட்டிய அமைச்சர் ஆய்வறிக்கையை மீன்வளத்துறை பரிசீலிக்கும் என்று கூறினார்.