சிவகங்கை, மே 2- சிவகங்கை மாவட்டம் கண்டர மாணிக்கம் ஊராட்சியில் நன் கொடையாளர்கள் பங்களிப்புடன் ஏராளமான வளர்ச்சித் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருவதற்கு நன் கொடையாளர்களைகு ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் பெரிய கருப்பன் பாராட்டினார். கண்டரமாணிக்கம் ஊராட்சி யில் நன்கொடையாளர்கள் பங்களிப் புடன் புதிய அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு கூடுதல் கட்டிடம் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டும் பணி, அரசு ஆரம்ப சுகாதார நிலை யத்தில் புதிய சூரிய மின்சார ஒளியில் மின்சார அமைப்பு, ஊராட்சியின் பல்வேறு இடங்களில் ஆழ்துளை கிணறுகள், மின்விசை பம்புகள் உள் ளிட்ட பல்வேறு வளர்ச்சிப் பணிகள் நன்கொடையாளர்கள் பங்களிப்பு டன் சிறப்பாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பள்ளி மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு பிச்சகுட்டி பெண் கள் உயர்நிலைப் பள்ளி நிர்வாகத்தி னர் மற்றும் வட அமெரிக்க நகரத்தார் சங்கம் பங்களிப்புடன் ரூ.42 லட்சம் மதிப்பீட்டில் வகுப்பறை கட்டடங்கள் திறந்து வைக்கப்பட்டது. பள்ளியின் வளர்ச்சிக்கு கட்டி டங்கள் கட்டித் தந்த டாக்டர் நாச்சி யப்பனுக்கும் அவர்களது குடும்பத்தி னருக்கும் அமைச்சர் பெரியகருப்பன் பாராட்டி நன்றி தெரிவித்துக்கொண்டார். இதேபோல், ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் இரண்டு பள்ளி நூலகங்களை தத்தெடுத்து அதற் கான தேவையான நிதிகளை வழங் கியதை கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பாராட்டினார். புத்தகத் திருவிழாவை சிறப்பு டன் நடத்தி முடித்த சிவகங்கை மாவட்ட ஆட்சித் தலைவர் மதுசூத னன் ரெட்டிக்கும் கல்வித்துறை அமைச்சர் பாராட்டினார். விழாவில் சட்ட அமைச்சர் ரகு பதி, சேது பாஸ்கரா கல்விக்குழு தலை வர் டாக்டர் சேதுராமன், கண்டர மாணிக் கம் ஊராட்சி மன்ற தலைவர் கருப் பையா, பள்ளியின் செயலாளர் பிச்சை குட்டி, தலைமை ஆசிரியர் அமலா செல்வ மேரி ஆகியோர் கலந்து கொண்டனர்.