சென்னை, ஆக. 29 - 700 காலிப் பணியிடங்களை நிரப்பக் கோரி வியாழனன்று (ஆக.29) சென்னை டிஎம்எஸ் வளாகத்தில் மருந்தாளுநர்கள் பட்டினிப் போராட்டம் நடத்தினர். ஆரம்ப சுகாதார நிலையங்களில் 700 மருந்தாளுநர் பணியிடங்கள் காலியாக உள்ளன. இதனால் நோயாளிகள் நீண்ட நேரம் காத்திருந்து மருந்துகளை பெற்றுச் செல்கின்றனர். பணிச்சுமை காரணமாக தடுப்பூசி மருந்துகளை உரிய வெப்பநிலையில் பராமரித்து வழங்க முடிவதில்லை. எனவே, சுகாதாரச் செயலாளர் ஒப்புக் கொண்டபடி காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும், நோயாளிகளின் எண்ணிக்கை கேற்ப மருத்துவ விதிகளின்படி புதிய பணியிடங்கள் உருவாக்க வேண்டும், மருந்தாளுநர் பணி நேரம் காலை 9 முதல் மாலை 4 மணி வரை என்ற அரசாணையை ரத்து செய்யக்கூடாது, சர்க்கரை வியா திக்கான மருந்துகள், உயர் ரத்த அழுத்தம் மற்றும் அத்தியாவசிய மருந்துகள் கொள்முதல் செய்ய போதிய நிதி ஒதுக்க வேண்டும், எச்1என்1 தடுப்பு மருந்துகள் குறுகியகால காலவதி தன்மை கொண்டவை தேவைக்கு அதிகமாக கொள்முதல் செய்து, மருந்தாளு நர்கள் மீது குற்றம் சாட்டக்கூடாது, தேவைப்பட்டியல் கோராத மருந்து களை தேவைக்கு மீறி வாங்கக்கூடாது, பழிவாங்கும் நடவடிக்கைகளை கைவிட வேண்டும் என்பன உள்ளிட் கோரிக்கை களை வலியுறுத்தி இந்தப்போரா ட்டம் நடைபெற்றது. தமிழ்நாடு அரசு அனைத்து மருந்தாளுநர் சங்கம் சார்பில் நடைபெற்ற இப்போராட்டத்தை தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாநிலப் பொருளாளர் எம்.தங்கராஜ் தொடங்கி வைத்தார். சங்கத்தின் பொதுச் செயலாளர் உ.சண்முகம் போராட்டத்தை நிறைவு செய்து பேசினார். அரசு ஊழியர் சங்க மாவட்டச் செயலாளர்கள் சா.டேனியல் ஜெயசிங் (தென்சென்னை), எம்.அந்தோணி சாமி (வடசென்னை) உள்ளிட்டு பல்வேறு சங்கங்களின் தலைவர்கள் போராட்டத்தை ஆதரித்து பேசினர்.