tamilnadu

img

7.5% உள் ஒதுக்கீடு...  446 பேருக்கு எம்பிபிஎஸ், பிடிஎஸ் இடங்கள் ஒதுக்கீடு

சென்னை:
7.5 விழுக்காடு உள் இட ஒதுக்கீட்டின் கீழ் 446 அரசுப் பள்ளி மாணவர்களுக்கு எம்பிபிஎஸ், பிடிஎஸ் இடங்கள் ஒதுக்கப் பட்டுள்ளன.

நீட் தேர்வின் காரணமாக தமிழ் நாட்டில் உள்ள மருத்துவக் கல்லூரிகளில் சேரும் அரசுப் பள்ளி மாணவர்களின் எண்ணிக்கை குறைந்தது. இதன் காரணமாக நடப்பு கல்வியாண்டு முதல் 7.5 விழுக்காடு உள் இட ஒதுக்கீடு அரசால் அமல்படுத்தப்பட்டது.கடந்த ஆண்டு நவம்பர் 18ஆம் தேதி நடைபெற்ற முதற்கட்ட மருத்துவக் கலந்தாய்வில், 7.5 விழுக்காடு உள் இட ஒதுக்கீட்டின் கீழ் 399 அரசுப் பள்ளி மாணவர்களுக்கு எம்பிபிஎஸ், பிடிஎஸ் இடங்கள் ஒதுக்கப்பட்டன.ஜனவரி 4ஆம் தேதி நடைபெற்ற இரண்டாம் கட்ட மருத்துவக் கலந்தாய்வில், 7.5 விழுக்காடு உள் இட ஒதுக்கீட்டின் கீழ் 47 அரசுப் பள்ளி மாணவர்களுக்கு எம்பிபிஎஸ், பிடிஎஸ் இடங்கள் ஒதுக்கப்பட்டன. இதுவரை 7.5 விழுக்காடு இட ஒதுக்கீட்டின் கீழ் 446 அரசுப் பள்ளி மாணவர்களுக்கு எம்பிபிஎஸ், பிடிஎஸ் இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.