சென்னை, ஜூலை 2- தமிழக சட்டப் பேரவையில் மருத்துவக் கல்வி இட ஒதுக்கீடு குறித்து எதிர்க் கட்சி தலைவர் கொண்டு வந்த சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானத்திற்கு சுகா தாரத்துறை அமைச்சர் விஜய பாஸ்கர் அளித்த பதில் வருமாறு:- தமிழக அரசு 69 சதவீத இட ஒதுக்கீடு கொள்கையில் உறுதி யாக இருக்கிறது. எந்த காலத்தில் எந்த சமரசத்துக்கும் இட மில்லை. அதை உறுதியாக பாது காக்கும். இதற்காக போராடிய வர் ஜெயலலிதா. குடியரசுத் தலைவரின் ஒப்புதலையும் பெற்று, தமிழக சட்டப்பேரவை யிலும் சட்டப்பாதுகாப்பை வழங்கினார். இதனால்தான், இந்த 69 விழுக்காடு இட ஒதுக்கீடு தாழ்த்தப்பட்ட பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்ப டுத்தப்பட்டவர்களுக்கு வேலை வாய்ப்பாக இருந்தாலும் கல்வி யாக இருந்தாலும் தமிழ்நாட் டில் தொடர்ந்து நடைமுறைப் படுத்தப்பட்டு வருகிறது. இந்த ஆண்டிற்கான மருத்துவக் கல்லூரி மாணவர் சேர்க்கைக்கான தர வரிசைப் பட்டியில் இன்னும் இரண்டொரு நாட்களில் வெளி யிடப்படும். இதற்கும் இந்த இட ஒதுக்கீட்டிற்கும் எந்தவித சம் பந்தமும் கிடையாது. சதி திட்டங்க ளுக்கு துணைபோகவில்லை. பொருளாதாரத்தில் பின் தங்கி யிருக்கும் முற்பட்ட வகுப்பின ருக்கு 10 விழுக்காடு என்ற புதிய நடைமுறையை அறிவித்திருக்கி றது மத்திய அரசு. இதுகுறித்து அனைத்து மாநிலங்களுக்கும் ஒரு கடிதமும் அனுப்பி உள்ளது. கர்நாடகம், தமிழகம் தவிர மற்ற அனைத்து மாநிலங்களும் அதற் கான ஒப்புதலை கொடுத்து விட்டன. மருத்துவ இடங்களை பொருத்த மட்டில், எம்.பி.பி.எஸ். சுக்கு 1000 இடங்கள் இருந்தால் 10 சதவீத இட ஒதுக்கீட்டை அமல் படுத்தினால் 1,400 இடங்கள் கிடைக்கும் என்ற வகையில் மத்திய அரசு ஒரு கடிதம் எழுதி அனுப்பியிருக்கிறது. மேலும், மாணவர் சேர்க்கை எண்ணிக்கை அதிகரித்துக்கொள்ளலாம் என்றும் 69 விழுக்காடு இட ஒதுக்கீட்டில் எந்த பாதிப்பும் இருக் காது என்றும் கூறியிருக்கிறார்கள். அதில் மேலும் சில விளக்கம் தேவைப்பட்டது. அதையும் கேட்டுள்ளோம். அதன் தொடர் பாகத்தான் இப்போது கருத்து பரி மாற்றம் நடைபெற்று வருகிறது. இதை முதலமைச்சர் கவனத் துக்கு கொண்டு சென்று உள் ளோம். அரசு, சட்ட நிபுணர்களிட மும் கருத்து கேட்டிருக்கிறோம். ஆனாலும், நாம் இடஒதுக்கீடு கொள்கையில் உறுதியாக உள் ளோம். இது குறித்து கல்வியாளர் கள், சட்ட வல்லுநர்களின் கருத் தும் கேட்க உள்ளோம். விரை வில் அங்கீகரிக்கப்பட்ட அனைத்து அரசியல் கட்சி தலை வர்களின் கருத்தை பெற்று அரசு செயல்படும் என்றார். அப்போது குறுக்கிட்ட ஸ்டா லின், “அரசின் இந்த முடிவை நான் வரவேற்கிறேன்” சமூகத்தி லும் கல்வியிலும் மிகவும் பின் தங்கியிருக் கும் பிரிவினருக்கான இடஒதுக்கீட்டை மத்திய அரசு இன்னமும் முழுமையாக அமல் படுத்தவில்லை. அறைகுறை யாகத்தான் இருக்கிறது. அதை முழுமையாக அமல்படுத்தி யிருந்தால் இந்த பிரச்சனையே வந்திருக்காது. மத்திய பல்கலைக் கழகங்களில் பிற்படுத்தப்பட்ட பகுதியில் இருந்து ஒரு விழுக்காடு பேராசிரியர்கூட இடம்பெறவில்லை என்று ஆங்கில இந்து நாளேடு தெரி வித்திருக்கிறது. மத்திய அரசு வழங்கியிருக்கும் 10 விழுக்காடு இடஒதுக்கீட்டில் தாழ்த்தப்பட்ட, பழங்குடியின சமூதாயத்தில் இருக்கும் ஏழைகள் பங்குபெற முடியாது. இடஒதுக்கீட்டு பிரி வினருக்கு மிகப்பெரிய அநீதி இழைக்கப்பட்டு சமூக நீதி சிதைக்கப்பட்டு நீர்த்துப்போக திட்டமிட்டு நடவடிக்கை மேற் கொள்ளப்பட்டு வருகிறது. இதை ஒருபோதும் அனுமதிக்க முடியாது என்றார். தொடர்ந்து பேசிய அமைச் சர், “சமூக நீதிக்கொள்கையில் அரசு உறுதியாக இருக்கிறது. தற்போது மருத்துவ இடங்க ளில் எண்ணிக்கை அதிகப்படுத் தப்படுகிறது என்ற அந்த ஒற்றை அடிப்படையில்தான் மத்திய அரசின் கடிதம் குறித்து கருத்து பரிமாற்றம் நடைபெறுகிறது. ஆனால், இந்த மசோதா நாடாளு மன்றத்தில் தாக்கல் செய்தபோது காங்கிரஸ் கட்சி ஆதரித்தது. அதன் தேர்தல் அறிக்கையிலும் அறிவித்தது. பாஜகவும் அதன் தேர்தல் அறிக்கையில் அறிவித்தி ருந்தது. அதைத்தான் இப்போது அமல்படுத்துகிறது. அதேபோல், கம்யூனிஸ்ட் கட்சிகளும் ஆத ரித்தன. அதிமுக, திமுக இரண்டு திராவிட கட்சிகள் மட்டுமே எதிர்த் தன. ஆனால், இன்றைக்கு காங்கிரஸ் கட்சியினர் தமிழ் நாட்டில் எதிர்க்கிறீர்கள். அப்படியென்றால் இதில் உங்கள் நிலைதான் என்ன? . இந்த சட்டத்திற்கு கம்யூனிஸ்ட் கட்சிகள்கூட மக்களவையில் ஆதரவு தெரிவித்தன. இதற்கு விளக்கம் அளித்த காங்கிரஸ் கட்சி உறுப்பினர் ஜெ.ஜெ. பிரின்ஸ், அந்த சட்டத் தால் பாதிக்கப்படுவது தமிழக மக்கள். எனவே இங்குள்ள மக்க ளுக்காக நாங்கள் குரல்கொடுக் கிறோம் என்றார்.