tamilnadu

img

3-வது பணிமனைக்கு 30 ஏக்கர் நிலம் தேர்வு

3-வது பணிமனைக்கு 30 ஏக்கர் நிலம் தேர்வு

இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டத்தில், 3 ஆவது பணிமனை அமைக்க சோழிங்கநல்லூர் - சிறுசேரி இடையே 30 ஏக்கரில் நிலம், சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் தரப்பில் தேர்வு செய்யப்பட்டுள்ளது. சென்னையில் 2ஆம் கட்ட மெட்ரோ ரயில் திட்டம், 3 வழித்தடங்களில் 116.1 கி.மீ. தொலைவுக்கு பாதைகள் அமைக்கும் பணி நடைபெறுகின்றன. இப்பணிகள் அனைத்தும் வரும் 2028இல் முடித்து, மெட்ரோ ரயில் சேவை தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது. ஓட்டுநர் இல்லாத 32 மெட்ரோ ரயில்கள் உட்பட மொத்தம் 138 ரயில்கள் இயக்கப்பட உள்ளன.