அஞ்சல் துறையில் 21,413 பணியிடங்கள்
10ஆம் வகுப்பு தகுதி
நாடு முழுவதும் தமிழ்நாடு அஞ்சல்துறை வட்டத்தில் கிராம அஞ்சலக ஊழியர் (Gramin Dak Sevak) பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிக்கை வெளியாகியுள்ளது. இதில் 21 ஆயிரத்து 413 பணியிடங்கள் காலியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. தமிழ்நாடு அஞ்சல் துறை வட்டத்தில் மட்டும் 2 ஆயிரத்து 292 பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளன. இந்தப் பணியிட நிரப்புதலில் 3 வகையான பணியிடங்களை நிரப்புகிறார்கள். இந்த மூன்று பணியிடங்களுக்கும் குறைந்தபட்சக் கல்வித்தகுதியாக பத்தாம் வகுப்பு நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது. கூடுதலாக அடிப்படைக் கணினிப் பயிற்சியும் பெற்றிருக்க வேண்டும்.
1. கிளை போஸ்ட் மாஸ்டர்
2. கிளை உதவி போஸ்ட் மாஸ்டர்
3. அஞ்சலக ஊழியர் 3 பணியிடங்களுக்கும் வயது வரம்பானது 18 வயது முதல் 40 வயதிற்குள் இருக்க வேண்டும்.
இட ஒதுக்கீட்டுப் பிரிவினருக்கு, அதற்குரிய தளர்ச்சி இருக்கும். பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் தேர்வு இருக்கும். தேர்வு செய்யப்பட்டவர்கள் 30 நாட்களுக்குள் சில அடிப்படையான தேவைகளுக்கு ஏற்பாடு செய்ய வேண்டும். அறிவிக்கையில் இந்த விபரங்கள் தரப்பட்டுள்ளன. விண்ணப்பதாரர்களுக்கு சைக்கிள் அல்லது இரு சக்கர வாகனம் ஓட்டத் தெரிந்திருப்பது அவசியமாகும். முதல் பிரிவான கிளை போஸ்ட் மாஸ்டராகத் தேர்வு செய்யப்படுபவருக்கு ரூ.12,000 - ரூ.29,300 என்ற அடிப்படையிலும், மற்ற இரு பிரிவினருக்கும் ரூ.10,000 - ரூ. 24,470 என்ற அடிப்படையிலும் ஊதியம் இருக்கும். இந்தப் பணியிட நிரப்புதல் குறித்த கூடுதல் விபரங்களுக்கு www.indiapostgdsonline.gov.in என்ற இணையதளத்தைப் பார்வையிடலாம். அஞ்சல் நிலையம் வாரியான காலிப் பணியிடங்களும் அதில் தரப்பட்டுள்ளன. விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி மார்ச் 3, 2025 ஆகும்.