tamilnadu

img

வடசென்னையில் சிபிஎம் யூடியூப் சேனல் துவக்கம்

சிந்தனை சிற்பி ம.சிங்காரவேலர் 165ஆவது பிறந்தநாளையொட்டி “சென்னையை தோழர் சிங்காரவேலர் சென்னையாக்குவோம்” என்ற முழக்கத்தோடு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 24ஆவது அகில இந்திய மாநாடு நிதியளிப்பு கூட்டம் வடசென்னை மாவட்டக் குழு சார்பில் தண்டையார்பேட்டையில் செவ்வாயன்று (பிப். 18) நடைபெற்றது. இதில் புதிதாக தொடங்கப்பட்டுள்ள “சிபிஐஎம் வடசென்னை யூடியூப்” சேனலை மத்தியக்குழு உறுப்பினர் கே.பாலகிருஷ்ணன் தொடங்கி வைத்தார். உடன் மாவட்டச் செயலாளர் எம்.ராமகிருஷ்ணன், மாநிலக்குழு உறுப்பினர் எல்.சுந்தரராஜன், மாநாட்டு வடசென்னை வரவேற்புக் குழு தலைவர் எஸ்.கே.மகேந்திரன், செயற்குழு உறுப்பினர் வி.ஜானகிராமன் ஆகியோர் இருந்தனர்.