செங்கல்பட்டு மாவட்டம், ஊரக வளர்ச்சி துறை கூடுதல் ஆட்சியரின் வாகனத்திற்கு போக்குவரத்து துறை சார்பில் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
செங்கல்பட்டு மாவட்டத்தில் கூடுதல் ஆட்சியராக பணியாற்றிய அனாமிக ரமேஷ் பயன்படுத்திய அரசு வாகனம் கடந்த நவம்பர் 20 ம் தேதி மாவட்டத்தில் தலைமை செயலாளரின் வருகையின் போது மாமல்லபுரம் பகுதியில் அதிவேகமாக 105 கிலோமீட்டர் வேகத்தில் சென்றுள்ளது. இந்நிலையில் தற்போது அதிவேகமாக சென்றதற்காக போக்குவரத்து துறை சார்பில் ரூ.1000 அபராதம் விதிப்பட்டுள்ளது. அபராதம் விதிக்கும் போது பணியில் இருந்த கூடுதல் ஆட்சியர் பணி மாறுதல் பெற்று சென்ற பின்னர் தற்போது பணியில் இருக்கும் கூடுதல் ஆட்சியருக்கு அபராதம் குறித்து குறுஞ்செய்தி அனுப்பப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
மாணவர் சங்கம் ஆர்ப்பாட்டம்
திருவள்ளூர், பிப்.21-
மாநில உரிமைகளை பறிக்கும் யுஜிசி-யின் புதிய வரைவு நெறிமுறை திரும்ப பெற வேண்டும், தமிழ்நாடு மாணவர்களின் கல்விக்கான ஒதுக்கிய நிதியை வழங்க வேண்டும், இந்தித்திணிப்பை திரும்பபெறவேண்டும் என வலியுறுத்தி இந்திய மாணவர் சங்கத்தின் சார்பில் வெள்ளி
யன்று (பிப் 21), கவரைப்பேட்டை தபால் நிலையம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு பொன்னேரி எல்என்ஜி கல்லூரி சங்க நிர்வாகி ஷர்மிளா தலைமை தாங்கினார். மாணவர் சங்கத்தின் மாவட்ட செயலாளர் அ.டிக்சன், மற்றும் நிர்வாகிகள் வசந்த்பௌதா, சுனில், டில்லிகணேஷ், நோவா, லாவண்யா, ஆர்த்தி, சுவாத்தி ஆகியோர் கண்டனஉரையாற்றினர். இதில் சிபிஎம் வட்ட செயலாளர் டி.கோபாலகிருஷ்ணன், கட்டுமான சங்கத்தின் ஒன்றிய செயலாளர் எம்.சி.சீனு, கிளை செயலாளர் எஸ்.கோவிந்தராஜ் ஆகியோர் கலந்து கொண்டனர்.