எம்ஆர்பி செவிலியர் சங்க மாநில மாநாடு வரவேற்பு குழு அமைப்பு
தமிழ்நாடு எம்ஆர்பி செவிலியர் மேம்பாட்டு சங்கத்தின் மூன்றாம் மாநில மாநாடு ஏப்.26 அன்று சென்னையில் நடை பெற உள்ளது. இந்த மாநாட்டிற்கான வர வேற்பு குழு அமைப்புக் கூட்டம் அண்மையில் வேப்பேரியில் நடைபெற்றது. தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் மாநிலப் பொருளாளர் சா.டானியல் ஜெயசிங், மாவட்டத் தலைவர்கள் சிவக்குமார் (வடசென்னை), கோபிநாத் (தென்சென்னை), செயலாளர்கள் ம.அந்தோணி சாமி (வடசென்னை), முத்துக்குமாரசாமி வேல் (தென் சென்னை), செவிலியர் சங்கத்தின் மாநில தலைவர் ஜி.சசிகலா, பொதுச் செயலாளர் என்.சுபீன், துணைத்தலைவர் அஸ்வினி கிரேஸ், சென்னை மாவட்டச் செயலாளர் பி.மீனாட்சி, பொருளாளர் சாம் ஸ்டெல்லா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். வரவேற்புக் குழுத் தலைவராக ம.அந்தோணி சாமி, செயலாளராக பி.மீனாட்சி, பொருளாளர் ஏ.சாம் ஸ்டெல்லா ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.