அரசுப் பள்ளிக்கு கூடுதல் வகுப்பறை திறப்பு
ஆவடி பகுதியில் ரூ.51.50 லட்சத்தில் அரசுப் பள்ளியில் கூடுதல் வகுப்பறை கட்டடம், வட்டார வள மையத்தின் அலுவலகம் ஆகியவற்றை சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் சா.மு.நாசர் திறந்து வைத்தார். நிகழ்வில் மேயர் கு.உதயகுமார், ஆணையர் எஸ்.கந்தசாமி, மாநகரப் பொறியாளர் பி.வி.ரவிச்சந்திரன்,தலைமை ஆசிரியர் கலியபெருமாள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.