வேலூர் நறுவீ மருத்துவமனையில் ராணிப்பேட்டை பெல் நிறுவன ஊழியர்கள் மற்றும் அவரது குடும்பத்தினர் சிகிச்சை பெறுவதற்கு நறுவீ மருத்துவமனையும் பெல் நிறுவனம் இணைந்து ஒப்பந்தம் செய்துள்ளனர். இதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் நறுவீ மருத்துவமனை தலை வர் ஜி.வி. சம்பத் மற்றும் பெல் நிறுவனத்தின் செயல் இயக்குநர் அருண்மொழி தேவன் கையொப்பமிட்டு ஒப்பந்தத்தை பரிமாறிக் கொண்டனர். ஏற்கெனவே எல்ஐசி உள்ளிட்ட ஒன்றிய அரசின் பல்வேறு பொதுத்துறை நிறுவனங்களின் ஊழி யர்கள் மற்றும் அவரது குடும்பத்தினர் சிகிச்சை பெறும் வகையில் அந்த நிறுவனங்களுடன் ஒப்பந்தம் செய்துள்ளது. அதன் தொடர்ச்சியாக, ராணிப்பேட்டை பகுதியில் இயங்கி வரும் ஒன்றிய அரசின் பொதுத்துறை நிறுவனமான பெல் எனப்படும் பாரத மிகுமின் நிறுவனத்தின் ஊழியர்கள், முன்னாள் ஊழியர்கள் மற்றும் அவரது குடும்பத்தினர் நறுவீ மருத்துவமனையில் சிகிச்சை பெறுவதற்கு வசதியாக நறுவீ மருத்துவமனையும் பெல் நிறுவனம் ஒப்பந்தம் செய்துள்ளது. இதில் பெல் நிறுவனத்தின் கூடுதல் பொது மேலாளர் எ. பாபு (மனித வளம் மற்றும் மருத்துவம்) பெல் மருத்துவமனையின் மருத்துவ கண்காணிப்பாளர் டாக்டர் அதுல் டிக்கா ஆகியோர் பங்கேற்றனர்.