tamilnadu

img

எம்.கே.பி. நகர் சென்ட்ரல் அவென்யூ பகுதியை விற்பனை மண்டலமாக அறிவிக்க கோரிக்கை

எம்.கே.பி. நகர் சென்ட்ரல் அவென்யூ பகுதியை விற்பனை மண்டலமாக அறிவிக்க கோ

எம்.கே.பி. நகர் சென்ட்ரல் அவென்யூ பகுதியை விற்பனை மண்ட லமாக அறிவிக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலி யுறுத்தி சென்னை மாவட்ட சாலை யோர சிறுகடை விற்பனையாளர்கள் சங்கத்தின் சார்பில் வடக்கு மாவட்ட வட்டார துணை ஆணையர் கட்டா தேஜா ரவியிடம் மனு அளிக்கப்பட்டது. அந்த மனுவில், சென்னை மாநக ராட்சி மண்டலம் 4க்கு உட்பட்ட எம்.கே.பி. நகர் சென்ட்ரல் அவென்யூ பகுதி யில் நூற்றுக்கணக்கான நடைபாதை வியாபாரிகள் பல ஆண்டுகளாக போக்குவரத்திற்கும், பொது மக்களுக் கும் எந்தவிதமான இடையூறும் இல்லா மல் மக்களுக்கு தேவையான பொருட்களை குறைந்த விலையில் விற்பனை செய்து வருகின்றனர். எனவே அந்த பகுதியை விற்பனை மண்டலமாக அறிவித்து, அவர்களுக்கு அடையாள அட்டை வழங்க வேண்டும்.

மண்டலம் 5 தங்கசாலை அரசு அச்ச கத்தின் அருகில் நீதிபதி ராமமூர்த்தி  2007ஆம் ஆண்டு வழங்கிய தீர்ப்பின் அடிப்படையில் விற்பனை மண்டலமாக அறிவித்து மாநக ராட்சியால் அடையாள அட்டை வழங்கப்பட்டு 131 வியாபாரிகள் விற்பனை செய்து வருகிறார்கள். அவர்களுக்கு மேற்கூரை அமைத்து, மின்சாரம் வழங்கி அவர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க உரிய நட வடிக்கை எடுக்க வேண்டும். அதேபோல் எம்.சி.ரோடு, ஜி.ஏ. ரோடு பகுதியில் நடைபாதை வியாபாரி களின் இடங்களை ஆய்வு செய்து குறிப்பிட்ட பகுதியை விற்பனை மண்ட லமாக அறிவிக்க வேண்டும். மண்டலம்  5 இல் உணவு விற்பனை செய்வதற்கு மாநகராட்சியால் வழங்கப்பட்ட 10 வண்டிகளை சீர்படுத்திக் கொடுக்க வேண்டும் என அந்த மனுவில் கூறப் பட்டுள்ளது. மனுவைப் பெற்றுக் கொண்ட ஆணையர் எம்.கே.பி. நகர் சென்ட்ரல் அவென்யூ பகுதியிலும், எம்சி ரோடு பகுதியிலும் உடனடியாக நேரில் வந்து ஆய்வு செய்வதாக உறுதியளித் துள்ளார். இதில் மாவட்டச் செயலாளர் டி.வெங்கட், பொருளாளர் எஸ்.கோபா லகிருஷ்ணன், நகர விற்பனைக்குழு உறுப்பினர் ஜி.மோனிஷா, சிபிஎம் மாவட்டக்குழு உறுப்பினர் எம்.ராஜ்கு மார், சென்ட்ரல் அவென்யூ சங்கத்தின் செயலாளர் எஸ்.அறிவழகன், மாநக ராட்சி வணிக வளாக சங்க நிர்வாகிகள் டி.மாரி, பி.ராஜகுரு,வள்ளலார் நகர் செயலாளர் எஸ்.தமீம் சேட் ஆகியோர் இருந்தனர்.