tamilnadu

சென்னை விரைவு செய்திகள்

எரி திரவ ஆலையில் தீ விபத்து
சென்னை திருமுல்லை வாயில் சுதர்சன் நகர் பகுதி யில் உள்ள தின்னர் தயாரிக் கும் நிறுவனத்தில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. எரிதிரவ தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ அருகே உள்ள தனியார் பள்ளிக்கும் பரவி யது. பள்ளி மாணவர்களின் சைக்கிள்கள் தீயில் எரிந்து  நாசமானது. தீயை அணைக் கும் பணியில் தீயணைப்பு வீரர்கள் தீவிரமாக ஈடுபட்டு ள்ளனர்.\

காவலர் பணியிட மாற்றம்
சென்னை மெரினா கடற்கரையில் அமர்ந்து பேசிக் கொண்டிருந்த இரு வரிடம், தேவையற்ற வார்த் தைகளை பயன்படுத்திய காவலர் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். சென்னை மெரினா கடற் கரையில் பெண் ஒருவர் தனது நண்பருடன் பேசிக் கொண்டிருந்த போது, ரோந்து பணியில் இருந்த காவலர் ‘நீங்கள் கணவன் மனைவியா’ என கேட்டு மிரட்டியுள்ளார். இதனை சம்பந்தப்பட்ட பெண் வீடியோ எடுத்துள் ளார். இந்த வீடியோ இணை யத்தில் வைரலான நிலை யில், சம்பந்தப்பட்ட காவலர் ராஜ்குமாரை பணியிட மாற்றம் செய்ய காவல் ஆணையர் உத்தரவு பிறப் பித்துள்ளார்.