tamilnadu

img

கூட்டுறவு - பொதுத்துறை சர்க்கரை ஆலைகளில்..... கரும்பு விவசாயிகளுக்கு ரூ.209 கோடி பாக்கியை வழங்க உயர்நீதிமன்றம் உத்தரவு

சென்னை:
கூட்டுறவு - பொதுத்துறை சர்க்கரைஆலைகள்,  கரும்பு விவசாயிகளுக்கு  ரூ.209 கோடி பாக்கித்தொகையை வழங்க வேண்டும் என்று சென்னைஉயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.இந்த உத்தரவின் பேரில் மாநில அரசுநடவடிக்கை எடுக்க வேண்டுமென்று தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

இதுதொடர்பாக சங்கத்தின் மாநிலப் பொதுச்செயலாளர் டி.ரவீந்திரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:தமிழ்நாடு அரசு அறிவித்து வழங்கி வந்த கரும்பு பரிந்துரை விலையில் 16 கூட்டுறவு மற்றும் 2 பொதுத்துறை சர்க்கரை ஆலைகள் 2014-15, 2016-17, 2017-18 ஆகிய மூன்று ஆண்டுகளுக்கு ரூ.209 கோடி விவசாயிகளுக்கு பாக்கி வைத்துள்ளனர். இந்த பாக்கியை வழங்கிட கோரி கூட்டுறவு சர்க்கரை ஆலைகள் சார்பில்கே-1 ஆலை தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்கம் சென்னை உயர்நீதி
மன்றத்தில் வழக்கு தொடுத்தது.இதே போல பெரம்பலூர் பொதுத்துறை சர்க்கரை ஆலை சார்பில் தமிழ்நாடு கரும்பு விவசாயசங்கத்தின் மாநில துணைத்தலைவர் ஏ.கே.ராஜேந்திரன் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார்(W.P. No.16917 of 2017).பெரம்பலூர் நேரு பொதுத்துறை ஆலை வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் 8 வாரகாலத்தில் பதில் அளிக்குமாறு மாநில அரசுக்கு 19.08.2019-ல் உத்தரவிட்டது. உத்தரவுப்படி மாநில அரசு சார்பில் வேளாண்துறை முதன்மை செயலாளர் நீதிமன்றத்திற்கும், தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்கத்திற்கும் 18.10.2019-ல் கடிதம் அனுப்பினார். அக்கடிதத்தில் சர்க்கரைதுறையில் ஏற்பட்ட நெருக்கடியின் காரணத்தால் மாநில அரசு பரிந்துரைவிலையின் பாக்கியை தருவதுதாமதமாகிவிட்டது, கூட்டுறவு ஆலைகள் தரமுடியாத நிலையில்மாநில அரசின் உதவியுடன் நிலுவைத்தொகை கடந்த காலத்தில்பலமுறை வழங்கப்பட்டுள்ளது. 

தற்போது நிலுவையில் உள்ளமாநில அரசு அறிவித்த விலையில்கூட்டுறவு - பொதுத்துறைஆலைகள் தர வேண்டிய பாக்கி தொகை விவசாயிகளுக்கு வழங்கப்படும். மாநில அரசு இதற்கான நடவடிக்கையை மேற்கொள்ள கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது என குறிப்பிட்டிருந்தார். 02.01.2020 அன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் கே-1 கூட்டுறவு சர்க்கரை ஆலைவழக்குவிசாரணைக்கு வந்தது. மாநில சர்க்கரை துறை ஆணையர் கூட்டுறவுமற்றும் பொதுத்துறை ஆலைகள் தர வேண்டிய மூன்றாண்டு கால மாநிலஅரசு பரிந்துரை விலை பாக்கியை படிப்படியாக வழங்கி விடுவதாகநீதிமன்றத்தில் கூறினார். உடனடியாகஅரசாணை பிறப்பிக்குமாறு நீதிமன்றம் அறிவுறுத்தியதன் படி அரசாணையை நீதிமன்றத்தில் சமர்ப்பித்தனர். இதன்படி 2014-15 ஆண்டு கூட்டுறவு - பொதுத்துறை ஆலைகள் தரவேண்டிய மாநில அரசு பரிந்துரை விலை பாக்கி ரூ.42 கோடியை உடனடியாக விவசாயிகளுக்கு தருவதாகமாநில அரசால் சர்க்கரை துறைஆணையர் நீதிமன்றத்தில் தெரிவித்தார். இதே போல 2015-16ஆண்டு மாநில அரசு பரிந்துரை விலைபாக்கி ரூ.87 கோடி, 2016-17 ஆண்டு மாநில அரசு பரிந்துரை விலைபாக்கி ரூ.80 கோடியையும் அடுத்தடுத்து கொடுத்து விடுவதாக மாநில அரசு சார்பில் சர்க்கரை துறை ஆணையம் ஒப்புக் கொண்டுள்ளது. 

மாநில அரசுக்கு கரும்பு விவசாயிகள் சங்கம் கோரிக்கை
இதன் மூலம் கூட்டுறவு மற்றும்பொதுத்துறை சர்க்கரை ஆலைகளுக்கு கரும்பு அனுப்பிய சுமார் 50ஆயிரத்திற்கும் மேற்பட்ட கரும்பு விவசாயிகளுக்கு 2014-15, 2015-16, 2016-17 மூன்று ஆண்டு கால மாநிலஅரசு பரிந்துரை விலை பாக்கி ரூ.209 கோடி கிடைக்கும். இதற்காகஉழைத்த அனைவருக்கும் தமிழ்நாடுகரும்பு விவசாயிகள் சங்கம் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறது. 24தனியார் சர்க்கரை ஆலைகள் விவசாயிகளுக்கு தர வேண்டிய மாநில அரசு பரிந்துரை விலை பாக்கி ரூ.1217கோடியை மாநில அரசு பெற்றுத்தர வேண்டும்.