2,000 ஏக்கர் நெற்பயிர்கள் தண்ணீரில் மூழ்கின: விவசாயிகள் வேதனை
சிதம்பரம், நவ.25 – சிதம்பரம் மற்றும் பரங்கிப்பேட்டை ஒன்றியப் பகுதிகளில் கடந்த இரண்டு நாள்களாகப் பெய்த தொடர் கனமழையால் சுமார் 2,000 ஏக்கர் சம்பா நெற்பயிர்கள் தண்ணீரில் மூழ்கியுள்ளன. இதனால் விவ சாயிகள் மிகுந்த வேதனை அடைந்துள்ள னர். கடலூர் மாவட்டம். சிதம்பரம், பரங்கிப்பேட்டை, புவனகிரி உள்ளிட்ட பகுதிகளில் 50 செ.மீட்டருக்கு மேல் மழை பதி வாகியுள்ளது. இதன் காரணமாக, பரங்கிப் பேட்டை ஒன்றியத்தில் உள்ள பூவாலை, மணிக்கொல்லை உள்ளிட்ட கிராமங்களின் வயல்களில் நீர் தேங்கியுள்ளது. மேலும், தமிழகத்தின் மிகப் பெரிய ஏரியான வீரா ணம் ஏரி இந்த ஆண்டு 8-வது முறையாக நிரம்பியுள்ளது. மணிக்கொல்லை கிராமத்தையொட்டி ஓடும் பரவனாறு முறையாக தூர்வாரப் படாத நிலையில், என்எல்சி சுரங்க நீர் மற்றும் மழைநீர் சேர்ந்து செல்லும் போது, நீர் செல்ல போதுமான இடமில்லாததால் அரு கில் உள்ள நெல் வயல்களில் தண்ணீர் எதிர்த்துப் பாய்கிறது. தொடர்ந்து 5 நாட்க ளுக்கு மேல் தண்ணீர் தேங்கினால் நெற்பயிர் கள் அழுகிவிடும் அபாயம் உள்ளதால், அதி காரிகள் பரவனாற்றில் மீதமுள்ள பகுதி களை உடனடியாகத் தூர்வார நடவடிக்கை எடுக்க வேண்டும் எனப் பாதிக்கப்பட்ட விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
