tamilnadu

img

மின் ஊழியர் மத்திய அமைப்பின் 18 வது மாநில மாநாடு

மின் ஊழியர் மத்திய அமைப்பின் 18 வது மாநில மாநாடு

கடலூரில் 160 பேர் கொண்ட வரவேற்பு குழு அமைப்பு

கடலூர், மே 22- தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பின் 18 வது மாநில மாநாடு கடலூரில் ஆகஸ்ட் 8, 9, 10  ஆகிய 3  நாட்கள் நடைபெற உள்ளது.      மின்துறையை தொடர்ந்து பொதுத்துறையாக பாது காப்பது, காலிப்பணி யிடங்களை நிரப்பவேண்டும் ஒப்பந்த ஊழியர்களை நிரந் தரமாக்கவேண்டும், மின் உற்பத்தியை பெருக்க அரசே அதிகளவில் மின் நிலையங்களை உருவாக் கவேண்டும் உள்ளிட்ட கோரி க்கைகளை வலியுறுத்தி தொடர்ச்சியாக போராடி வரும் அமைப்பு மின்  ஊழியர் மத்திய அமைப்பா கும், இந்த மாநாட்டை வெற்றி கரமாக நடத்துவதற்காக வர வேற்பு குழு அமைப்பு கூட்டம் திருப்பாதிரிப்புலியூ ரில் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு மத்திய அமைப் பின் மாநில துணைப் பொதுச் செயலாளர் டி.பழனிவேல் தலைமை தாங்கினார்.  விழுப்புரம் சிறப்புத் தலைவர் பி.சிவசங்கர், கடலூர் சிறப்புத் தலைவர் எஸ்.ரவிச்சந்திரன், விழுப்பு ரம் பொருளாளர் வி.கே.ஏழு மலை, ஓய்வு பெற்றோர் அமைப்பின் மாநில துணைத் தலைவர்கள் எம்.புருஷோத் தமன், டி வெங்கடாசலம் ஆகி யோர் முன்னிலை வகித்த னர். கடலூர் கிளைச் செயலா ளர் என்.தேசிங்கு வரவேற் றார். தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பின் மாநில பொதுச் செயலாளர் எஸ்.ராஜேந்திரன் கலந்து கொண்டு 160 பேர் கொண்ட வரவேற்பு குழுவை அறி வித்தார். அதன்படி,  மாநாட்டு வரவேற்பு குழுத்  தலைவ ராக  கே.அம்பிகாபதி, செய லாளராக டி.பழனிவேல்,  பொருளாளராக என்.தேசிங்கு, உதவி செயலா ளர்களாக பி.கருப்பையன், ஆர்.மூர்த்தி, ஆர்.சேகர் ஆகி யோரை அறிமுகம் செய்து வைத்தார்.

இலச்சினை வெளியீடு

இந்த கூட்டத்தில் மாநாட் டின் இலச்சினை வெளியிட ப்பட்டது. இதனை விவசாய தொழிலாளர் சங்கத்தின் கட லூர் மாவட்டத் தலைவர் எஸ்.ஜி.ரமேஷ் பாபு, மத்திய அமைப்பின் மாநில பொதுச் செயலாளர் எஸ்.ராஜேந்தி ரன் ஆகியோர் வெளியிட்ட னர். இந்த கூட்டத்தில் மின் ஊழியர் மத்திய அமைப்பு மாநிலத் தலைவர் டி.ஜெய் சங்கர், பொறியாளர் அமைப்பின் மாநிலப் பொரு ளாளர் கே.அருள் செல்வம், மத்திய அமைப்பின் மாநிலப் பொருளாளர் எம்.வெங்கடேசன், துணைப் பொதுச் செயலாளர்கள் கே.ரவிச்சந்திரன், பீர்முக மது ஷா, ஆர்.ரவிக்குமார், விழுப்புரம் மண்டல செய லாளர் கே. அம்பிகாபதி, சிபி எம் மாவட்டச் செயலாளர் ஜி.மாதவன், விழுப்புரம் மாவட்ட சிஐடியு செயலா ளர் ஆர்.மூர்த்தி, கடலூர் குடியிருப்போர் சங்கத்தின் சிறப்பு தலைவர் எம். மருத வாணன், பொதுச் செய லாளர் பி.வெங்கடேசன், கூட்டுறவு சம்மேளன பொதுச் செயலாளர் என்.ஆர். ஜீவானந்தம், போக்குவரத்து சங்க சிறப்புத் தலைவர் ஜி.பாஸ்க ரன், என்எல்சி சிஐடியு பொதுச் செயலாளர் எஸ்.திரு அரசு, கட்டுமான சங்க மாநில துணைச் செயலாளர் வி.கிருஷ்ணமூர்த்தி, மாநில க்குழு உறுப்பினர் கே.சாவித் திரி, சிபிஎம் மாநகரச் செயலா ளர் ஆர்.அமர்நாத் உள்ளிட்ட ஏராளமானோர்  கலந்து கொண்டனர்.