தமிழ்நாடு காவல்துறையில் 17 துணை காவல் கண்காணிப்பாளர் (டி.எஸ்.பி) நிலை அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து காவல்துறை தலைமை இயக்குனர் (டி.ஜி.பி) சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார்.
வருகின்ற நாடாளுமன்ற தேர்தலை தொடர்ந்து நாடாளுமன்ற தொகுதிகளில் பணியாற்றிய அதிகாரிகளை இடமாற்றம் செய்ய வேண்டும் என தமிழ்நாடு தேர்தல் ஆணையம் தமிழக அரசுக்கு கடிதம் எழுதி இருந்தது.
இதற்கிடையில் ஒரே இடத்தில் 3 ஆண்டுகள் தொடர்ந்து பணியாற்றிய அதிகாரிகளை தேர்தலுக்கு முன்னதாகப் பணியிட மாற்றம் செய்யப்பட வேண்டும் என இந்தியத் தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது.
இந்நிலையில், 17 துணை காவல் கண்காணிப்பாளர் (டி.எஸ்.பி) நிலை அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து காவல்துறை தலைமை இயக்குனர் (டி.ஜி.பி) சங்கர் ஜிவால் உத்தரவிட்டார்.
காவல்துறை தலைமை இயக்குனர் (டி.ஜி.பி) சங்கர் ஜிவால் அனுப்பிய பணியிடமாற்ற உத்தரவு கடிதத்தில் குறிப்பிட்டது பின் வருமாறு,
தேனி துணை காவல் கண்காணிப்பாளர் (டி.எஸ்.பி) ஆக இருந்த சி. நல்லு, திருவண்ணாமலை போளூர் உட்பிரிவு துணை காவல் கண்காணிப்பாளர் (டி.எஸ்.பி) ஆக பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
சென்னை, எம்.கே.பி நகர் சரக காவல் உதவி ஆணையர் (ஏ.சி.பி) ஆக இருந்த ஆர்.டி. பிரமானந்தன், சென்னை, திருமங்கலம் சரக காவல் உதவி ஆணையர் (ஏ.சி.பி) ஆக பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
சென்னை, திருமங்கலம் சரக காவல் உதவி ஆணையர் (ஏ.சி.பி) ஆக இருந்த பி. வரதராஜன், சென்னை, எம்.கே.பி நகர் சரக காவல் உதவி ஆணையர் (ஏ.சி.பி) ஆக பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
கடலூர், நெய்வேலி உட்பிரிவு துணை காவல் கண்காணிப்பாளர் (டி.எஸ்.பி) ஆக இருந்த ஏ. சஃபியுல்லாஹ், மதுரை, அண்ணா நகர் சரக காவல் உதவி ஆணையர் (ஏ.சி.பி) ஆக பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
திருச்சிராப்பள்ளி, கண்டோன்மென்ட் சரக காவல் உதவி ஆணையர் (ஏ.சி.பி) ஆக இருந்த எல்.பாஸ்கர், தஞ்சாவூர், பட்டுக்கோட்டை உட்பிரிவு துணை காவல் கண்காணிப்பாளர் (டி.எஸ்.பி) ஆக பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
காஞ்சிபுரம் மாவட்ட துணை காவல் கண்காணிப்பாளர் (டி.எஸ்.பி) ஆக இருந்த எஸ். மணிமேகலை, காஞ்சிபுர மாவட்ட குற்றப்பிரிவு துணை காவல் கண்காணிப்பாளர் (டி.எஸ்.பி) ஆக பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
கிருஷ்ணகிரி, தேன்கனிக்கோட்டை உட்பிரிவு துணை காவல் கண்காணிப்பாளர் (டி.எஸ்.பி) ஆக இருந்த சி. முரளி, காஞ்சிபுரம் துணை காவல் கண்காணிப்பாளர் (டி.எஸ்.பி) ஆக பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
மதுரை, அண்ணா நகர் சரக காவல் உதவி ஆணையர் (ஏ.சி.பி) ஆக இருந்த ஏ. சுராகுமாரன் தேனி துணை காவல் கண்காணிப்பாளர் (டி.எஸ்.பி) ஆக பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
மதுரை, திலகர் திடல் சரக காவல் உதவி ஆணையர் (ஏ.சி.பி) ஆக இருந்த எம்.மகேஷ், விருதுநகர், ராஜபாளையம் உட்பிரிவு துணை காவல் கண்காணிப்பாளர் (டி.எஸ்.பி) ஆக பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
மதுரை கோவில் சரக காவல் உதவி ஆணையர் (ஏ.சி.பி) ஆக இருந்த பி. காமாட்சி, மதுரை, திலகர் திடல் சரக காவல் உதவி ஆணையர் (ஏ.சி.பி) ஆக பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
திருவாரூர், நன்னிலம் உட்பிரிவு துணை காவல் கண்காணிப்பாளர் (டி.எஸ்.பி) ஆக இருந்த பி. தமிழ்மாறன், அரியலூர், மாவட்ட குற்றப் பதிவுப் பணியகத் துணை காவல் கண்காணிப்பாளர் (டி.எஸ்.பி) ஆக பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
திருவண்ணாமலை போளூர் உட்பிரிவு துணை காவல் கண்காணிப்பாளர் (டி.எஸ்.பி) ஆக இருந்த எஸ். கோவிந்தசாமி, கடலூர், நெய்வேலி உட்பிரிவு துணை காவல் கண்காணிப்பாளர் (டி.எஸ்.பி) ஆக பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
விருதுநகர், ராஜபாளையம் உட்பிரிவு துணை காவல் கண்காணிப்பாளர் (டி.எஸ்.பி) ஆக இருந்த என். நாகராஜன், மதுரை கோவில் சரக காவல் உதவி ஆணையர் (ஏ.சி.பி) ஆக பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
தஞ்சாவூர், பட்டுக்கோட்டை உட்பிரிவு துணை காவல் கண்காணிப்பாளர் (டி.எஸ்.பி) ஆக இருந்த எம். ரவிச்சந்திரன் திருச்சிராப்பள்ளி, கண்டோன்மென்ட் சரக காவல் உதவி ஆணையர் (ஏ.சி.பி) ஆக பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
துணை காவல் கண்காணிப்பாளர் (டி.எஸ்.பி) ஆக இருந்த ஆர். சரவணகுமார், திருவாரூர், நன்னிலம் உட்பிரிவு துணை காவல் கண்காணிப்பாளர் (டி.எஸ்.பி) ஆக பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
துணை காவல் கண்காணிப்பாளர் (டி.எஸ்.பி) ஆக இருந்த பி. பால் ஸ்டீபன், சென்னை மாநகர மத்திய குற்றப்பிரிவு காவல் உதவி ஆணையர் (ஏ.சி.பி) ஆக பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
காஞ்சிபுரம் மாவட்ட, க்யூ கிளை குற்றப் புலனாய்வுத் துறை, துணை காவல் கண்காணிப்பாளர் (டி.எஸ்.பி) ஆக இருந்த கே. சாந்தி, கிருஷ்ணகிரி, தேன்கனிக்கோட்டை உட்பிரிவு துணை காவல் கண்காணிப்பாளர் (டி.எஸ்.பி) ஆக பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
மேலே குறிப்பிடப்பட்ட பழைய பதவியின் பொறுப்பில் இருக்கும் காவல்துறை அதிகாரிகள், புதிய பதவியின் பொறுப்பை உடனடியாக ஏற்றுத் தலைமை அலுவலகத்திற்குத் தெரிவிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
பணியிடமாற்றம் செய்யப்பட்ட அதிகாரிகள் மருத்துவ காரணங்களுக்காக விடுப்பு தேவைப்பட்டால், தலைமை அலுவலகத்தின் எந்த உத்தரவுக்கும் காத்திருக்காமல் மருத்துவ வாரியத்திற்குப் பரிந்துரைக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
துணைக் காவல் கண்காணிப்பாளர்கள்/ உதவிக் காவல் ஆணையர்கள் நிவாரணம் மற்றும் சேரும் தேதியைத் தலைமை அலுவலகத்திற்கு முன்கூட்டியே தெரிவிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.