tamilnadu

img

4 மாவட்டங்களில் மின்கட்டணம் செலுத்த 15 நாட்கள் கூடுதல் அவகாசம்  

தொடர் கனமழையால் பாதிக்கப்பட்டுள்ள சென்னை உள்பட 4 மாவட்டங்களில் மின்கட்டணம் செலுத்துவதற்கு கூடுதல் அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.  

 கனமழை மற்றும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களில் மின்கட்டணம் செலுத்த 15 நாட்கள் கூடுதல் அவகாசம் வழங்கப்படுவதாக மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார். 

கோடம்பாக்கம் துணை மின் நிலையத்தில் ஆய்வு மேற்கொண்ட மின்சாரத்துறை அமைச்சர் செய்தியாளர்களிடம் பேசுகையில், சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களில் மின்கட்டணம்  செலுத்த 15 நாட்கள் கூடுதல் அவகாசம் வழங்கப்படுகிறது. மழை, வெள்ளம், பாதித்த பகுதிகளில் விரைவில் மின்விநியோகம் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. நேற்று மட்டும் முன்னெச்சரிக்கையாக 71 இடங்களில் மின்இணைப்பு துண்டிக்கப்பட்டது. அதில் 41 இடங்களில் மீண்டும் மின் விநியோகம் வழங்கப்பட்டுள்ளது என்றார்.