பிளஸ் 2 பொதுத் தேர்வில் தோல்வி அடைந்த மாணவர்களுக்கான துணைத் தேர்வு திட்டமிட்டபடி நடைபெறும் என்று அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது.
தமிழகத்தில் கனமழை காரணமாக சென்னை உள்ளிட்ட 6 மாவட்டங்களில், பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில், பிளஸ் 2 பொதுத் தேர்வில் தோல்வி அடைந்த மாணவர்களுக்கான துணைத் தேர்வுகள் நடைபெறும் என்று அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது. ஜூன் 19-ஆம் தேதி முதல் 26-ஆம் தேதி வரி பிளஸ் 2 துணைத்தேர்வு நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது.