tamilnadu

img

பிளஸ் 2 மறுதேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியீடு

சென்னை:
பிளஸ் 2 மறுதேர்வு எழுதும் மாணவர்களுக்கான ஹால் டிக்கெட் திங்களன்று (ஜூலை 13) வெளியிடப் பட்டது.

கொரோனா ஊரடங்கு காரணமாகக் கடந்த மார்ச் 24-ம் தேதி நடைபெற்ற பிளஸ் 2 இறுதித் தேர்வில் 30 ஆயிரத்துக்கும் அதிகமான மாணவர்கள் பங்கேற்கவில்லை. அந்த மாணவர்களுக்கு ஜூலை 27-ம் தேதி மறுதேர்வு நடத்தப்பட உள்ளதாக அமைச்சர் செங்கோட்டையன் அண்மையில் அறிவித்தார்.இந்நிலையில் இதற்கான தேர்வுக்கூட நுழைவுச் சீட்டுகளை (ஹால் டிக்கெட்) மாணவர்கள் ஜூலை 13 முதல் ஜூலை 17-ம் தேதி வரை இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.இணையதள வசதி இல்லாத மாணவர்கள் தாங்கள் படிக்கும் பள்ளிகளிலும், தனித்தேர்வர்கள் தங்களுக்கான தேர்வு மையங்களிலும் நேரடியாகச் சென்று ஹால் டிக்கெட்டுகளைப் பெற்றுக் கொள்ளலாம். மேலும், தேர்வு மையங்கள் மாணவர்கள் படிக்கும் அந்தந்தப் பள்ளிகளிலேயே அமைக்கப்பட உள்ளன.

ஹால் டிக்கெட்டை https://apply1.tndge.org/dge-hallticket என்ற இணைய முகவரிக்குச் சென்று தரவிறக்கம் செய்து கொள்ளலாம். இதில் மாணவர்களின் பதிவெண், பிறந்த தேதியைக் குறிப்பிட வேண்டியது அவசியம்.கூடுதல் விவரங்களைப் பள்ளியின் தலைமை ஆசிரியர்களைத் தொடர்பு கொண்டு அறிந்து கொள்ளலாம் என்று தேர்வுத் துறை சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.