சென்னை:
விவசாய மசோதாக்கள் தொடர்பாக விவாதிப்பதற்காக தோழமைக் கட்சிகளின் கூட்டத்திற்கு திமுக அழைப்பு விடுத்துள்ளது.
இதுகுறித்து திமுக விடுத்திருக்கும் அறிக்கையில் கூறியிருப்பதாவது:-திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் வரும் 21ஆம் தேதி சென்னை அண்ணா அறிவாலயத்தில் அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெறுகிறது.நாடாளுமன்றத்தில் கொண்டு வரப்பட்டுள்ள 3 விவசாய சட்ட மசோதாக்கள் குறித்து விவாதிப்பதற்காக அனைத்துக் கட்சி கூட்டம் கூட்டப்படுவதாக திமுக தலைமை தெரிவித்துள்ளது.