2025-26ஆம் ஆண்டில் 1 லட்சம் புதிய வீடுகள் கட்ட ரூ.3,500 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
தமிழ்நாடு அரசு, கடந்த 14 ஆம் தேதி மாநிலத்தின் நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்தது. அதில், கலைஞர் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் கான்க்ரீட் வீடுகள் கட்டும் திட்டத்திற்காக ரூ.3,500 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும் என அறிக்கப்பட்டது. அதன்படி, 2025-26ஆம் ஆண்டில் 1 லட்சம் புதிய வீடுகள் கட்ட ரூ.3,500 கோடி நிதி ஒதுக்கீடு செய்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. 2030-ஆம் ஆண்டுக்குள் தமிழ்நாட்டின் ஊரகப் பகுதிகளில் 8 லட்சம் கான்கிரீட் வீடுகள் கட்டிக் கொடுக்க இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.