tamilnadu

img

கால்முறிந்த தொழிலாளிக்கு சிஐடியு வழக்கால் இழப்பீட்டு தொகை

கால்முறிந்த தொழிலாளிக்கு  சிஐடியு வழக்கால் இழப்பீட்டு தொகை

கால் முறிவு ஏற்பட்ட தொழிலாளிக்கு சிஐடியு நடத்திய வழக்கால் இழப்பீட்டுத் தொகை கிடைத்தது. தாம்பரம் மாநகராட்சிக்கு சொந்தமான மேலச்சேரி குடிநீரேற்று நிலையத்தில் மின் மோட்டார் ஆப்ரேட்டர் இ.தேவராஜன் பணி யாற்றி வந்தார். சிம்லா கூல் மேக்கர்ஸ் நிறு வனத்தின் ஒப்பந்த தொழிலாளியான தேவ ராஜன் கடந்தாண்டு அக்டோபரில்  பணியாற் றிவிட்டு செல்லும் போது விபத்துக்குள்ளா னார். இந்த விபத்தில் அவருக்கு கால்முறிவு ஏற்பட்டது. தொழிலாளியிடம் இருந்து நிறுவனம் அரசு தொழிலாளர் காப்பீட்டு (இஎஸ்ஐசி)தொகை பிடித்தம் செய்யவில்லை. மேலும், தொழிலாளிக்கு மருத்துவ இழப்பீடும் வழங்கவில்லை. இது தொடர்பாக தாம்பரம் மாநகராட்சி தொழிலாளர் சங்கம் (சிஐடியு) இருங்காட்டுக்கோட்டை தொழிலாளர் துறை  துணை ஆணையரிடம் வழக்கு தொடுத்தது.   இதனையடுத்து தொழிலாளிக்கு ஒப்பந்த நிறுவனம் ரூ.75ஆயிரம் நட்ட ஈடு வழங்கியது. இந்த வழக்கை சங்கத்தின் தலைவர் கு. ராஜன்மணி, பொதுச் செயலா ளர் கே.சி.முருகேசன் முன்னின்று நடத்தினர்.