பெண்கள் பெயரில் ரூ.10 லட்சம் வரையிலான அசையா சொத்துகள் பதிவு செய்யப்பட்டால் 1% பதிவுக்கட்டணம் குறைக்கப்படும் என்று தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
தமிழ்நாட்டில் ரூ.10 லட்சம் வரையிலான வீடு, மனை உள்ளிட்ட அசையா சொத்துகளை பெண்கள் பெயரில் பதிவு செய்தால், 1% பதிவுக்கட்டணம் குறைக்கப்படும் என்று கடந்த மார்ச் 14-ஆம் தேதி சட்டப்பேரவையில் நிதியமைச்சர் தங்கம் தென்னரசு அறிவித்தார். அதன்படி, இதற்கான அரசாணை நேற்று வெளியிடப்பட்டுள்ளது. மேலும் இந்த சலுகை ஏப்ரல் 1 முதல் அமலுக்கு வருகிறதாக அரசாணையில் அறிவிக்கப்பட்டுள்ளது.