tamilnadu

வண்டலுர் உயிரியல் பூங்காவில் சிங்கம் உயிரிழந்தது

வண்டலுர் உயிரியல் பூங்காவில் சிங்கம் உயிரிழந்தது

சென்னை,மார்ச் 29-

வண்டலூர் பூங்காவில் ராகவா என்ற ஆண் சிங்கம் மற்றும் கவிதா என்ற பெண் சிங்கத்துக்கு கடந்த 2011 -ம் ஆண்டு ஜூன் மாதம் வீரா என்ற ஆண் சிங்கம் பிறந்தது.    சிறு வயதில் இருந்து இடுப்பு திசுக்கள் கோளாறால் பாதிக்கப்பட்டிருந்த சிங்கம் கடந்த ஒரு மாதமாக எழுந்து நடக்க முடியாமல் மிகவும் அவதிப்பட்டு இருந்தது. இதனை தொடர்ந்து பூங்கா மருத்துவர்கள் மற்றும் கால் நடை அறிவியல் பல்கலைக் கழக மருத்துவர்கள் தீவிரமாக சிகிச்சைகளை மேற்கொண்டனர். ஆனால் சிகிச்சை பலனின்றி அந்த சிங்கம்  உயிரிழந்தது.