இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம், தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் சார்பில் சனிக்கிழமையன்று (ஜூன் 21) படப்பை அருகே உள்ள கரசங்கால் கிராமத்தில் ரத்ததான முகாம் நடைபெற்றது. செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்காக நடைபெற்ற இந்த முகாமிற்கு ரத்ததான கழக ஒருங்கிணைப்பாளர் சண்முக பாபு தலைமை தாங்கினார். வாலிபர் சங்கத்தின் காஞ்சிபுரம் மாவட்டத் தலைவர் மபா.நந்தன், மாவட்டச் செயலாளர் க.புருஷோத்தமன், ஜனநாயக மாதர் சங்கத்தின் மாநிலச் செயலாளர் வா.பிரமிளா, அரசு ஊழியர் சங்க மாவட்டத் தலைவர் லெனின், செயலாளர் துரைமருதன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.