செங்கல்பட்டு, ஆக. 5 - தனியார் கல்வி நிறுவனங்கள் கல்விக் கட்டணத்தை செலுத்துமாறு நச்சரித்து வருவ தால் பெற்றோர்கள் மனஉளைச்சல் அடைந்துள்ளனர். தனியார் பள்ளிகள் 75 சதவீத கட்ட ணத்தை வசூலித்துக் கொள்ளலாம் என தமி ழக அரசு அறிவித்துள்ளது. 40 சதவீதக் கட்ட ணத்தை முதற்கட்டமாக வசூலிக்கலாம் என்று சென்னை உயர் நீதிமன்றம் கூறியிருக்கிறது. ஆனால், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட் டங்களில் சில தனியார் பள்ளிகள் முழுக் கல்விக் கட்டணத்தையும் கேட்டு பெற்றோர் களை நிர்ப்பந்தித்து, கட்டாயப்படுத்து கின்றன. ஊரடங்கால் வேலையின்றி, வருமானத் திற்கு வழியின்றி உள்ள குடும்பங்களால், தனியார் பள்ளிகளின் கட்டணத்தைக் கட்ட முடியாத நிலை உள்ளது. தனியார் பள்ளி களின் கெடுபிடிகளால் பெற்றோர்கள் மன உளைச்சலில் உள்ளனர். இதுகுறித்து பெற்றோர்கள் சிலர் கூறு கையில், “சேவையான கல்வியை, சந்தைப் பொருளாக மாற்றியதால், பேரிடர் காலத்தி லும் வலுக்கட்டாயமாகப் பணம் பறிக்கின்ற னர். ஊரடங்கால் வருமானம் இன்றித் தவிப்ப தால், கல்விக் கட்டணத்தைக் கட்ட இயல வில்லை. பள்ளிகளின் நிர்பந்ததால் கடன் வாங்கி செலுத்த வேண்டி உள்ளது. அதேசம யம் கடன் தரவும் பலர் மறுக்கின்றனர்” என்று வேதனைப்பட்டனர். “கல்வி கட்டணம் கட்டச் சொல்லி நிர்ப் பந்திக்கும் தனியார் பள்ளிகள் குறித்து பொது மக்கள் மற்றும் பெற்றோர்கள் புகார் அளிக்கும் வகையில் கல்வித்துறை சார்பில் ஹெல்ப் லைன் எண்களை வெளியிட வேண்டும்” என்றும் பெற்றோர்கள் கோருகின்றனர்.