செங்கல்பட்டு, பிப்.3- தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் செங்கல்பட்டு மாவட்டம் புதியதாக உதய மானது. தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் காஞ்சிபுரம் மாவட்டக்குழுவாக செயல் பட்டு வந்தது. காஞ்சிபுரம் மாவட்டத்தை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு என இரண்டாக தமிழக அரசு பிறித்தது. இதனைத் தொடர்ந்து சங்கத்தின் மாவட்ட சிறப்புப் பேரவைக் கூட்டம் காஞ்சிபுரத்தில் மாவட்டத் தலைவர் வெ.லெனின் தலைமையில் நடை பெற்றது. மாவட்ட இணைச் செயலாளர் வே.குமார் வர வேற்றார். அனைத்து துறை ஓய்வூதியர் சங்கத்தின் நிர்வாகி வெ.தென்னரசு வாழ்த்திப் பேசினார். அரசு ஊழியர் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் சா.முகமது உசேன் சிறப்புரையாற்றி னார். மாநிலச் செயலாளர் தெ.வாசுகி பேரவையை நிறைவுரையாற்றினார். இந்த பேரவைக் கூட்டத்தில் காஞ்சிபுரம், செங்கல்பட்டு என இரண்டு மாவட்டக்குழுக்கள் பிறிக்கப் பட்டது.
காஞ்சிபுரம்
காஞ்சிபுரம் மாவட்டத் தலைவர் வெ.லெனின், செயலாளர் துரை.மருதன், பொருளாளர் வே.குமார் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.
செங்கல்பட்டு
செங்கல்பட்டு மாவட்டத் தலைவராக சா.முகமது உசேன், செயலாளர் மு.தாமோதரன், பொருளாளர் எம்.என். ஸ்ரீராம் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.