tamilnadu

img

பார்வையற்றவர்களுக்கு பிரெய்லி வாக்காளர் அடையாள அட்டை

 செங்கல்பட்டு, பிப்.10-  பார்வை குறைபாடுடைய மாற்றுத்திறனாளிகள் தேர்தலில் வாக்களிக்க ஏதுவாக மின்னணு வாக்குப் பதிவு இயந்திரத்தில் பிரெய்லி முறை ஏற்படுத்தப்பட்டு, கடந்த மக்களவைத் தேர்தலின்போது நாடு முழுவதும் பயன்படுத்தப்பட்டது. இதைத் தொடர்ந்து, வாக்காளர் அடையாள அட்டையில் அவர்களது பெயர், விவரங்கள் சரியாக உள்ளனவா என்பதை, அவர்களே சரிபாத்துக் கொள்ளும் வகையில், பிரெய்லி முறையிலான வாக்காளர் அடையாள அட்டைகளை தேர்தல் ஆணையம் வடிவமைத்துள்ளது. இந்நிலையில், காஞ்சிபுரம் மாவட்டத்திற்கு 3639 பிரெய்லி முறையிலான வாக்காளர் அடையாள அட்டைகள் வந்துள்ளது. இதனைத் தொடர்ந்து  மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் 4 மாற்றுத்திறனாளிகளுக்கு வாக்காளர் அடையாள அட்டையை ஆட்சியர் பா.பொன்னையா  வழங்கி துவக்கிவைத்தார். மற்ற பார்வையற்ற மாற்றுத்திறனாளிகளுக்கு வாக்குச் சாவடி அலுவலர் மூலம் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.