சென்னை, மார்ச் 28- கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் சென்னை எழில கத்தில் உள்ள மாவட்ட அவசர கட்டுப்பாட்டு மையத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளிக்கையில்,” கொரோனா வைரஸ் தாக்கு தலை கட்டுப்படுத்த மக்கள் தான முன்வந்தால் 100 விழுக்காடு கட்டுப்படுத்த முடியும்” என்றார். அனைத்து மாவட்டங்களிலும் காய்கறி கடை களை விசாலமான இடங்களில் அமைக்க உத்தரவு பிறப்பிக்கப் பட்டுள்ளது என்றும் தமிழகம் முழு வதும் கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கை களில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறையை சேர்ந்த 30 ஆயிரம் ஊழியர்கள் ஈடுபட்டிருக் கிறார்கள் என்றும் கூறினார்.
அத்தியாவசிய பொருட்களை எடுத்துச் செல்லும் வாகனங்களுக்கு எந்த தடையும் இல்லை. அதற்கான அடையாள அட்டை வாக னங்களுக்கு வழங்கப்படுகிறது. மாவட்ட நிர்வா கத்திடம் அதை பெற்றுக்கொள்ளலாம். காவல்து றைக்கும் இதுகுறித்து அறிவுறுத்தப்பட்டி ருப்பதாகவும் அமைச்சர் தெரிவித்தார். இந்த பேட்டியின்போது, வருவாய்த்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் அதுல்ய மிஸ்ரா, வருவாய் நிர்வாக ஆணையர் ஜெ.ராதா கிருஷ்ணன், பேரிடர் மேலாண்மை இயக்குனர் டி.ஜெகந்நாதன் ஆகியோர் உடனிருந்தனர்.