election2021

img

தேசிய குடிமக்கள் பதிவேடு முறையாக அமல்படுத்தப்படும்.... அசாமில் அனைவருக்கும் அடையாள அட்டை....

திஸ்பூர்:
அசாமில், காங்கிரஸ் - இடதுசாரிகள், போடோலாந்து மக்கள் முன்னணி அடங்கிய மகாஜோட் கூட்டணிவெற்றிபெற்றால், தேசிய குடிமக்கள்பதிவேட்டை ஏற்றுக் கொண்டு, மாநிலத்திலுள்ள அனைத்து மக்களுக்கும்அடையாள அட்டை வழங்கப்படும் என்று காங்கிரஸ் தலைவர் ரிபுன்போரா தெரிவித்துள்ளார்.

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியுடன் சேர்ந்து, கவுகாத்தியில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரத்தில் ரிபுன் போரா உரையாற்றினார். அப்போது இதனை அவர் தெரிவித்தார்.“பாஜக தற்போது என்ஆர்சி-யை நிறுத்தி வைத்துள்ளது. காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கு வந்தால், பாஜகஅரசாங்கத்தால் முடக்கி வைக்கப்பட்டுள்ள என்ஆர்சி-யை உச்சநீதிமன்றத்தின் உதவியுடன் அமல்படுத்துவோம். அசாமைச் சேர்ந்த ஒவ்வொரு நபருக்கும் அடையாள அட்டை வழங் குவோம். கடந்த 2019ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட என்ஆர்சி இறுதிப் பட்டியலில் விட்டுப்போன 19.06 லட்சம் உண்மையான இந்திய குடிமக்களின் பெயர்கள் மேலும் தாமதமின்றி பதிவு செய்யப்படுவதையும் நாங் கள் உறுதி செய்வோம்” என்று போரா குறிப்பிட்டுள்ளார்.அசாம் மாநிலத்தில் சுமார் 3.3 கோடி பேர் தேசிய குடிமக்கள் பதிவேட்டில் தங்கள் பெயரைச் சேர்த்துக் கொள்ள விண்ணப்பித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.