மும்பை:
வீடு, வாகனக் கடன்களுக்கான வட்டி குறையும் வகையில் வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி அளிக்கும் குறுகியக் கால கடன் களுக்கான ரெப்போ வட்டி விகிதத்தை ரிசர்வ் வங்கி புதன்கிழமை குறைத்துள்ளது.கடந்த 6 மாதங்களில் ரெப்போ எனப்படும் குறுகிய கால கடன்களுக்கான வட்டி விகிதம் தொடர்ந்து 4-வது முறை யாகக் குறைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம்,ரிசர்வ் வங்கியிடம் இருந்து வங்கிகள் பெறும் கடன்களுக்கான வட்டியை 0.35% குறைத்தது ரிசர்வ் வங்கி. இதனால் 5.75 சதவீதத்தில் இருந்த ரெப்போ வட்டி விகிதம் 5.40 சதவீதமாகக் குறைக்கப்பட்டது.இதன் அடிப்படையில், வீட்டுக் கடன், வாகனக் கடன் உள்ளிட்டவை குறையவாய்ப்பு ஏற்பட்டுள்ளது. இதன்மூலம், தொழில்முனைவோர், சிறு தொழில்புரி வோர், வீடு, வாகனங்கள் வாங்குவோர் என பலதரப்பட்ட மக்களுக்கும் குறைந்த வட்டியில் வங்கிக் கடன் கிடைக்கும். இருப்பினும் நிரந்தர வைப்புத் தொகை களுக்கான வட்டியும் குறைய வாய்ப்பு உள்ளது.இந்நிலையில், நாட்டின் பொருளாதார வளர்ச்சியின் (ஜிடிபி) இலக்கு 7 சத வீதத்தில் இருந்து 6.9 சதவீதமாக மாற்றியமைக்கப்பட்டுள்ளது.