tamilnadu

img

பெட்ரோல் நிலையம் அமைக்க புதிய கட்டுப்பாடு

மும்பை 
நாட்டின் பொதுத் துறை எண்ணெய் நிறுவனங்களான இந்தியன் ஆயில் கார்பரேஷன், பாரத் பெட்ரோலியம், ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் ஆகிய மூன்று நிறுவனங்களும் இந்தியாவில் 66,408 பெட்ரோல் நிலையங்களை இயக்கி வருகின்றன. மேலும் தனியார் நிறுவனங்கள் 7000-க்கும் அதிகமான பெட்ரோல் நிலையங்களை இயக்கி வருகின்றன. தனியார் துறையில் நயாரா எனர்ஜி நிறுவனம் அதிகபட்சமாக 5,453 பெட்ரோல் நிலையங்களை கொண்டுள்ளன. உலக சந்தையில் கச்சா எண்ணெய் துறை வேகமான வளர்ச்சியைக் கொண்டுள்ளதால் இந்தியாவில் அந்நிய நாட்டினைச் சேர்ந்த நிறுவனங்கள்  பெட்ரோல் நிலையங்களை அமைக்க முயற்சித்து வருகிறது. இதனை கட்டுப்படுத்த மத்திய அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. 

அதில் பெட்ரோல் நிலையங்கள் அமைப்பதற்கான விண்ணப்பத் தொகை ரூ.25 லட்சமாகவும், பெட்ரோல் நிலையம் அமைக்க விரும்பும் நிறுவனமானது ரூ.250 கோடி நிகர சொத்து மதிப்பைக் கொண்டிருக்க வேண்டும். மேலும் விண்ணப்பிக்கும் நிறுவனம் குறைந்தது 100 பெட்ரோல் நிலையங்களை அமைத்து,அதில் 5 சதவீத பெட்ரோல் நிலையங்களைக் கிராமப்புறங்களில் அமைக்க வேண்டும்.பெட்ரோல், டீசல் பெறப்படும் தகவல், உள்கட்டுமான வசதிகள், போக்குவரத்து அம்சங்கள், கொள்திறன் உள்ளிட்ட அனைத்து விவரங்களையும் முன்கூட்டியே அரசிடம் சமர்ப்பிக்க வேண்டும். தற்போதைய நிலையில் பி.பி. நிறுவனம் (இங்கிலாந்து), அராம்கோ (சவுதி அரேபியா), டோட்டல் எஸ்.ஏ. (பிரான்ஸ்) போன்ற நிறுவனங்கள் இந்தியாவில் பெட்ரோல் நிலையங்கள் அமைக்கும் பணியில் இறங்கியுள்ளன.எனினும் மத்திய அரசின் இந்த கட்டுப்பாடு பொதுத்துறை நிறுவனத்திற்கா? இல்லை மோடியின் நண்பர் முகேஷ்  அம்பானிக்கா? என்பது விரைவில் தெரியவரும்.