பண்ருட்டி என்றாலே அனை வருக்கும் நினைவுக்கு வரு வது முக்கனிகளில் ஒன்றான பலாவும், உயர்ரக முந்திரியும்தான். அந்த முந்திரித் தொழிலையும், பலா விவசாயத்தையும் சார்ந்துள்ள விவ சாயிகள் தற்போது மிகுந்த சோகத்திற்கு ஆளாகியுள்ளனர். கரோனா வைரஸ் தொற்று பரவுத லைத் தடுக்கும் விதமாக ஊரடங்கு மே 3-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள் ளதால், 21 நாட்களுக்குப் பின் ஊர டங்கு நீங்கும், அதன் மூலம் தொழி லைத் தொடங்கலாம் என காத்தி ருந்த முந்திரி விவசாயிகள், சொல்ல முடியாத துயரத்துக்கு ஆளாகி யுள்ளனர்.
கடந்த 2011ஆம் ஆண்டு இறுதியில் வீசிய தானே புயலால் முந்திரியும், பலா மரங்களும் வேரோடு சாய்ந்தன. இதனால் அதைச் சார்ந்திருந்த 1 லட்சத் துக்கும் மேற்பட்ட விவசாயிகளின் வாழ்வாதாரம் கேள்விக்குறியானது. இதையடுத்து, அரசு பல்வேறு நட வடிக்கைகளை மேற்கொண்டு நிவா ரண உதவிகளை வழங்கியதை யடுத்து, அவர்களது வாழ்வாதாரம் மீண்டும் துளிர்விடத் தொடங்கியது.
இந்த நிலையில், ஊரடங்கு அமல் படுத்தப்பட்டதால், பலா மரங்களில், பழத்தை அறுவடை செய்ய முடியா மல், மரத்திலேயே விட்டுவிடுகின்ற னர். இதனால் பழங்கள் அழுகும் நிலை ஏற்பட்டுள்ளது. பண்ருட்டி பலாப் பழங்களுக்கு என தனி மவுசு உண்டு. வெளிமாநிலங்களுக்குக் கொண்டு செல்ல முடியவில்லை, சில்லறை விற்பனை நிலையங்களும் இல்லை என்பதால் பெரு நஷ்டத் தைச் சந்தித்து வருவதாக பலா விவசாயிகள் கவலை தெரி விக்கின்றனர். அதேபோன்று தற்போது முந்தி ரியை அறுவடை செய்யும் காலம். முந்திரியை அறுவடை செய்து, அவற்றை மூட்டைகளாகக் கட்டி வைக்க வாய்ப்புண்டு. ஆனால், முந்திரி மகசூலுக்கு கடன் வாங்கிய கடன் தொகையைச் செலுத்த முடி யாது. இறக்குமதி செய்து முந்தி ரியை மதிப்பு கூட்டும் தொழிலை சிறுதொழிலாக செய்து வந்த சுமார் 1 லட்சத்துக்கும் மேற்பட்ட பெண்கள், தொழில் செய்ய முடியாமலும், நுண்கடன் தொகையை அடைக்க முடியாமலும் அவதிப்படுகின்றனர்.
அதேபோன்று முந்திரி பெரு வியபாரிகள், மதிப்புக் கூட்டப்பட்ட முந்திரிகளை எந்த நாட்டுக்கும் ஏற்றுமதி செய்ய முடியாததால், கடன் தொகையை திரும்பச் செலுத்திவ தில் பிரச்சினை நிலவுவதாகத் தெரி விக்கின்றனர். மகளிர் சுய உதவிக் குழு மூல மாக வங்கியில் கடன் பெற்று முந்திரி மதிப்புக் கூட்டும் தொழில் செய்து அந்த சிறு தொழில் முனைவோர் இந்த ஊரடங்கு உத்தரவால் தொழில் முடங்கிவிட்டது. வருமா னம் இல்லாமல் திண்டாடி வருகி றார்கள்.
வங்கியில் வாங்கிய கடனை 3 மாதம் செலுத்தத் தேவையில்லை என்று கூறுகின்றனர். ஆனால், வங்கி யிலோ, 3 மாதக் கடன் தொகையை செலுத்தத் தவறினால் கூடுதல் வட்டி யோடுதான் செலுத்த வேண்டும் என்கின்றனர். இது ஒருபுறம் அவர் களை அச்சமடைந்த செய்திருக்கி றது. இந்த முந்திரி, பலா தொழிலை நம்பி இப்பகுதியில் சுமார் ஒன்றரை லட்சம் வாழ்ந்து வருகின்றனர். இதே நிலை நீடித்தால் தங்களின் நிலை நிலை என்னாவது?" என்று கண்ணீர் வடித்து வருகிறார்கள். நீண்ட காலப் பயிர்களான முந்திரி பலா விவசாயிக ளுக்கு நிவாரண உதவியாக மாதத்திற்கு ரூ.25 ஆயி ரம் வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.