திருவனந்தபுரம்:
போராட்ட வரலாற்றில் புதிய அத்தியாயம் படைத்தது ஞாயிறன்றுசிபிஎம் அழைப்பு விடுத்திருந்த சத்தியாகிரகம். வீடுகளே போராட்டக் களமாக மாறிய சத்தியாகிரகத்தில் லட்சக்கணக்கான மக்கள் பங்கேற்றனர்.கேரளம் முழுவதும் ஆக.23 மாலை 4 மணி முதல் 4.30 வரை நீடித்த சத்தியாகிரகத்தில் பெண்கள் இளைஞர்களின் பங்கேற்புகுறிப்பிடும்படி காணப்பட்டது. 25 லட்சத்துக்கும் மேற்பட்டோர் இதில்பங்கேற்றனர். கோவிட் காலத்திலும் மத்திய அரசு தொடரும் மக்கள் விரோதக் கொள்கைகளுக்கு எதிரான கேரளத்தின் எச்சரிக்கையாக போராட்டம் மாறியது.
சிபிஎம் கேரள மாநிலச் செயலாளர் கொடியேரி பாலகிருஷ்ணன் குடும்பத்தினருடன் திருவனந்தபுரம் மருதங்குழியில் உள்ள வீட்டில் சத்தியாகிரகம் மேற்கொண்டார். அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் எஸ்.ராமச்சந்திரன்பிள்ளையும், மத்தியக்குழு உறுப்பினர் எம்.வி.கோவிந்தனும் ஏ.கே.ஜி சென்டரில் நடந்த சத்தியாகிரகத்தில் பங்கேற்றனர். கேரளத்தில் லட்சக்கணக்கான வீடுகளிலும் கட்சி மற்றும் வர்க்க வெகுஜன அமைப்புகளின் அலுவலகங்களும் போராட்டக்களமாயின. கட்சித் தலைவர்களும் உறுப்பினர்களும் பல்வேறு அமைப்புகளின் ஊழியர்களும் குடும்பத்தோடு இப்போராட்டத்தில் அணி திரண்டனர். வருமான வரி வரம்புக்கு உட்படாத அனைத்து குடும்பங்களுக்கும் ஆறு மாதங்களுக்கு மாதம் ரூ.7500 வீதம் வங்கிக்கணக்கில்செலுத்த வேண்டும். தேவையானவர்களுக்கு 10 கிலோ உணவு தானியம் ஆறு மாதங்களுக்கு வழங்க வேண்டும். வேலை உறுதிதிட்டத்தில் 200 நாட்கள் வேலையும், ஊதியத்தை அதிகரித்தும் வழங்க வேண்டும். பொதுத்துறை நிறுவனங்களை தனியார்மயமாக்குவதை கைவிடுக உள்ளிட்ட 16 அம்ச கோரிக்கைகள் சத்தியாகிரகத்தில் முன்வைக்கப்பட்டன.