tamilnadu

img

இந்தியன் ஓவர்சீஸ் வங்கி ரூ.850 கோடி நிதி திரட்ட திட்டம்

பொதுத்துறை வங்கியான இந்தியன் ஓவர்சீஸ் வங்கி நடப்பு நிதியாண்டில், அதன் சொத்துகள் மற்றும் முதலீடுகளை விற்று ரூ.850 கோடி நிதி திரட்ட உள்ளதாக அறிவித்துள்ளது.

இது குறித்து இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் அறிவிப்பில், வங்கியின் மூலதன இருப்பை அதிகரித்துக் கொள்ள அனைத்து வகையிலும் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி தீவிர ஆலோசனை செய்து வருகிறது.

அதன் ஒரு பகுதியாக சொத்துகள் மற்றும் முதலீடுகளை விற்பனை செய்து முதலீடுகளை விற்பனை செய்து நிதி திரட்ட ஆலோசிக்கப்பட்டு வருகிறது. மேலும் பல கூட்டு திட்டங்கள் மூலம் வளங்களை பெருக்குவதற்காக வங்கியின் பங்குகளை விற்பனை செய்யும் வாய்ப்புகள் குறித்தும் பரிசீலித்து வருகிறது. இதன் மூலமாக வங்கிக்கு, ரு.445 கோடி வரை கிடைக்கும் என்று மும்பை பங்கு சந்தையிடம் தெரிவித்துள்ளது. 

இவ்வங்கி மூலதனத்தை உயர்த்துவதற்காக, வங்கிக்கு சொந்தமான சிங்கப்பூர் மற்றும் ஹாங்காங்கில் பிரதான சொத்துகள் உட்பட ரூ.900 கோடி மதிப்புள்ள மொத்தம் 32 சொத்துகளை அடையாளம் காட்டியுள்ளது. கடந்த 2018-19 நிதியாண்டில், இந்த வங்கிக்கு சொந்தமான 6 சொத்துகளை விற்று ரூ.129 கோடி ரூபாய் நிதி திரட்டியது. 

மேலும் இந்த வங்கி 26 சொத்துகளை விற்கும் நடவடிக்கையில் ஏற்கனவே இறங்கியுள்ளது. இந்த சொத்துகளின் மதிப்பு ரூ.775 கோடியாகும். இது தொடர்பாக இந்தியன் ஓவர்சீஸ் வங்கி அதன் பங்குதாரர்களுடன் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.