சென்னை, நவ. 4- சென்னை கோயம்பேட் டில் வரத்து குறைவு காரண மாக ஒரு கிலோ சின்ன வெங்காயத்தின் விலை 100 ரூபாயாக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் திண்டுக்கல், திருச்சி, கரூர், கோவை உள்ளிட்ட மாவட்டங் களில் சின்ன வெங்கா யம் அதிகளவில் பயிரிடப்படு கிறது. கடந்த சில நாட்களாக பெய்து வரும் தொடர் மழை யால் சின்ன வெங்காயம் விளைச்சல் பாதிக்கப் பட்டுள்ளதாக கூறப்படு கிறது. இதன் தொடர்ச்சியாக வரத்து குறைந்து கடந்த வாரம் கிலோ 60 ரூபாய்க்கு விற்கப்பட்ட சின்ன வெங்காயம், தற்போது 100 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.
இதேபோல் மகாரா ஷ்டிரா, மத்தியப் பிரதேசம் உள்ளிட்ட இடங்களில் அதிக மழை பெய்வதால் அங்கிருந்து விற்பனைக்கு வரும் பெரிய வெங்காயம் விலையும் உயர்ந்துள்ளது. கடந்த வாரம் வரை 50 ரூபாய்க்கு விற்பனை செய்ய ப்பட்டு வந்த ஒரு கிலோ பெரிய வெங்காயம், வரத்து குறைவால் தற்போது 80 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. சென்னை கோயம் பேட்டில் மற்ற காய்கறிகளின் விலையும் உயர்ந்துள்ளது. ஒரு கிலோ தக்காளியின் விலை 20 ரூபாய் அதிகரித்து 50 ரூபாய்க்கு விற்கப்படு கிறது. 20 ரூபாய்க்கு விற்கப் பட்ட கத்திரிக்காயின் விலை தற்போது 40 ரூபாயாகவும் வெண்டைக்காய் விலை 2 மடங்காக உயர்ந்து 50 ரூபாயாகவும் உள்ளது. இதேபோல் கேரட்டின் விலை 20 ரூபாய் உயர்ந்து 60 ரூபாய்க்கும் 30 ரூபாய்க்கு விற்கப்பட்ட அவரைக்காய், 60 ரூபாய்க்கும் விற்கப்படு கிறது. முள்ளங்கி விலை 30 ரூபாயாகவும், கொத்தவரங் காய் மற்றும் கோவக்காய் விலை 40 ரூபாயாகவும் உள்ளது.