சென்னை, ஜூன் 22- கொரோனா வைரஸைக் கட்டுப்படுத்த பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கால் தனியார் பேருந்து, சுற்றுலா டாக்ஸி தொழி லில் ஈடுபட்டுள்ள 20 லட்சம் பேர் வேலை இழந்துள்ளனர். இதுகுறித்து இந்திய பேருந்து மற்றும் கார் ஓட்டு நர்களுக்கான கூட்டமைப்பு (பி.ஓ.சி.ஐ) வெளியிட்டுள்ள செய்தியில், “15 லட்சம் அளவுக்குத் தனியார் பேருந்துகள், மேக்ஸி கேப்கள் மற்றும் 11 லட்சம் சுற்றுலா டாக்ஸிகள் எங்க ளுடைய கூட்டமைப்பு சார்பில் இயங்கி வந்தன. இதனால் ஒரு கோடிப் பேருக்கு நேரடி வேலைவாய்ப்பு கிடைத்து வந்தது. கொரோனா வைரஸ் பாதிப்புகளால் அரசு பிறப்பித்த ஊரடங்கு உத்தரவைத் தொடர்ந்து, தனியார் பேருந்து மற்றும் சுற்றுலா டாக்ஸி தொழிலில் ஈடுபட்டு வந்த 20 லட்சம் பேர் வேலை இழந்துள்ளனர். எங்களது கூட்டமைப்பினருக்கு அரசின் ஆத ரவு தேவையாக உள்ளது. எங்களில் பலர் இந்தத் தொழிலை விட்டு விட்டுச் செல்லக் கூடிய சூழலில் உள்ளனர். அதனால் அவர்கள் வாங்கியுள்ள கடன்களுக்கான வட்டியைத் தள்ளுபடி செய்ய வேண்டும்” என அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளது.