tamilnadu

img

காயத்தால் தங்கப்பதக்கத்தை நழுவவிட்ட விகாஸ் கிருஷ்ணன்

மேற்கு ஆசிய நாடான ஜோர்டனில் ஆசியக் குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் தொடர் நடைபெற்று வருகிறது.  இந்த தொடரில் பங்கேற்ற பெரும் பாலான இந்திய நட்சத்திரங்கள் அரை யிறுதி வரை முன்னேறி ஒலிம்பிக் தொடருக்குத் தகுதி பெற்றனர். இதே போல ஆடவர் 69 கிலோ எடைப்பிரிவில் தொடக்கம் முதலே சிறப்பாக விளை யாடிய இந்தியாவின் விகாஸ் கிருஷ்ணன் இறுதிப் போட்டிக்கு முன்னேறி டோக்கியோ ஒலிம்பிக் தொடருக்குத் தகுதி பெற்றார்.  இந்நிலையில் காயம் காரணமாக இறுதிப் போட்டியில் இருந்து விலகுவ தாக விகாஸ் கிருஷ்ணன் தெரி வித்துள்ளார்.  இதனால் தங்கப்பதக்கத்தை நழுவவிட்டு வெள்ளிப் பதக்கம்பெற் றார்.  ஒலிம்பிக் தொடருக்கு இன்னும் 3  மாத காலமே உள்ள நிலையில், நாட்டின் நட்சத்திர குத்துச்சண்டை வீரரான விகாஷ் கிருஷ்ணாவின் காயம் இந்தி யக் குத்துச்சண்டை உலகில் அதிர்ச்சி அலையை உருவாக்கியுள்ளது.