tamilnadu

img

ஒவ்வொரு நாளும் கருப்புத் தினமே

கருப்புப் பணத்திற்கெதிரான துல்லியமான தாக்குதல் என்று பிரதமர் மோடியால் படா டோபமாக அறிவிக்கப்பட்ட பணமதிப்பிழப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டு மூன்று ஆண்டுகள் பூர்த்தியாகியுள்ளன. ஆனால் இது இந்தியப்  பொருளாதாரத்தின் மீது நடத்தப்பட்ட துல்லியத் தாக்குதலாகவே மாறி அனைத்துத் துறைகளை யும் அனைத்துப் பகுதி மக்களையும் நிலைகுலைய வைத்துவிட்டது என்பதுதான் உண்மை. 

கருப்புப் பண ஒழிப்பு, கள்ளப்பண ஒழிப்பு பயங்கரவாதிகளுக்கு பணம் கிடைப்பதை தடுப்பது, டிஜிட்டல் பரிவர்த்தனையை ஊக்குவித்து தாள் பணப் புழக்கத்தை குறைப்பது என பிரதமர் மோடி யால் பணமதிப்பிழப்புக்கு காரணமாகக் கூறப்பட்ட எதுவும் நடக்கவில்லை.

மாறாக ஏழை, எளிய மக்களிடம் இருந்த பணம் தான் ஒழிக்கப்பட்டது. ஏடிஎம் மையங்க ளிலும் வங்கிகளிலும் அலைமோதிய மக்கள் கூட்டம் அல்லலுக்கு ஆளானது.  இதனால் ஏற்பட்ட நெருக் கடியால் நூற்றுக்கும் மேற்பட்ட உயிர்கள் பறிபோயின. 

இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு தாக்குத லுக்குள்ளான தங்களது வியாபாரம் இன்னமும் கூட சரியாகவில்லை என்று சிறு வியாபாரிகள் புலம்புகின்றனர்.

கருப்புப்பணத்தை முற்றாக பிடிக்கப்போகி றோம் என்பதும் சுத்தமாக நடக்கவில்லை. கிட்டத் தட்ட99 சதவீதம் பணம் மீண்டும் வங்கிகளுக்கு வந்துவிட்டது. கருப்புப்பணம் வைத்திருந்த யாரும் வரிசையில் நின்று அதை மாற்றவில்லை. மாறாக அன்றாடம் உழைத்துப் பிழைக்கும் எளிய மக்கள்தான் பாதிக்கப்பட்டார்கள். 

சிறு, குறு தொழில்கள் நொறுங்கின. ஆனால் அதுகுறித்து எந்தக் குற்ற உணர்ச்சியும் மத்திய ஆட்சியாளர்களுக்கு இல்லை. தங்களது நட வடிக்கை தவறாக முடிந்துவிட்டது என்று மக்களி டம் பகிரங்கமாக ஒப்புக்கொள்ளும் குறைந்த பட்ச நேர்மை கூட பிரதமர் மோடிக்கு இல்லை. இரட்டைத் தாக்குதலாக ஜிஎஸ்டி வரி விதிப்பும், பெரும்பாலான துறைகளை நாசம் செய்து கொண்டிருக்கிறது.

இந்தியப் பொருளாதாரம் முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு நெருக்கடியில் சிக்கியுள்ளது.  விவசாயத்துறை அழிந்து கொண்டிருக்கிறது. ஆட்டோமொபைல் உள்ளிட்ட பெரும் தொழில் கள் மூச்சுத் திணறிக் கொண்டிருக்கின்றன. வேலை யின்மை நாளுக்குநாள் பெருகி வருகிறது. வேலை வாய்ப்புகள் உருவாகாதது மட்டுமல்ல, பொதுத் துறை நிறுவனங்கள் தனியார்மயமாக்கப்படு வதால் இருக்கும் வேலையும் பறிபோகிறது.

இந்தியப் பொருளாதார நிலைகுறித்து பல்வேறு தரப்பினருடன் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆலோசனை நடத்துவதாக வரும் செய்திகள் கவலையளிக்கின்றன. ஏனெனில் இவரது ஆலோசனைகள் அனைத்தும் கடைசி யில் கார்ப்பரேட்டுகளுக்கு கருணை காட்டுவதா கவும், எளிய மக்களை நடுத்தெருவில் விடுவதா கவுமே அமையும். பணமதிப்பிழப்பு அறிவிக்கப் பட்ட இந்த நாள் மட்டுமல்ல, மோடி ஆட்சியில் இந்தியப் பொருளாதாரத்திற்கு ஒவ்வொரு நாளும் கருப்புத் தினமாகவே விடிகிறது.