tamilnadu

img

தினமும் 70 நிமிடங்கள் வீடியோ ஸ்ட்ரீமிங் செயலியில் செலவிடும் இந்தியர்கள்

இந்தியாவில் ஸ்மார்ட்ஃபோன் உபயோகிப்பவர்கள் ஒரு நாளைக்கு 70 நிமிடங்கள் வீடியோ தளங்களில் செலவிடுகிறார்கள் என ஈரோஸ் நவ்-கே.பி.எம்.ஜி. அறிக்கை வெளியிட்டுள்ளது.

இது குறித்து ஈரோஸ் நவ்-கே.பி.எம்.ஜி கூறியிருப்பது, இந்தியாவில் ஸ்மார்ட்ஃபோன் உபயோகிப்பவர்கள் ஒரு நாளைக்கு சுமார் 70 நிமிடங்கள் வீடியோ தளங்களில் செலவிடுகிறார்கள்.மேலும் வாரத்திற்கு 12.5 முறை சுழற்சி முறையில் இது செய்யப்படுகிறது. ஒரு குறிப்பிட்ட நேரத்தில் பார்வையாளர்கள் 2.5-க்கும் மேற்பட்ட வீடியோ தளங்களை அணுகுகிறார்கள். டிவி மற்றும் பெரிய திரையரங்குகளில் திரைப்படங்கள் பார்ப்பது போன்றவை விருப்பமான தேர்வாக மாறியுள்ளதாக அறிக்கையில் குறிப்பிட்டுள்ளனர்.