ஸ்மார்ட் போன்களில் கூகுள் ப்ளே ஸ்டோரில் இருந்துபணப் பரிமாற்றத்துக்கு பயன்படுத்தப்படும் ‘பேடிஎம்’ (PaytM) அப்ளிகேசன், வெள்ளியன்று திடீரென அகற்றப பட்டு, தற்போது மீண்டும் சேர்க்கப்பட்டுள்ளது. முன்னதாக, இந்தியாவில் பேடிஎம் செயலியை சுமார் 5 கோடிப்பேர் பயன்படுத்தும் நிலையில், அவர்கள் கூகுள் நடவடிக்கையால் அதிர்ச்சி அடைந்தனர். தற்போது பேடிஎம் அப்ளிகேசன் மீண்டும் வந்ததில் அவர்கள் நிம்மதி அடைந்துள்ளனர். பேடிஎம் தலைமை நிர்வாக அதிகாரி விஜய் ஷேகர் ஷர்மா அனைவருக்கும் நன்றி தெரிவித்துள்ளார்.