technology

img

கூகுள் மெசேஜஸில் புதிய பாதுகாப்பு அம்சங்கள் அறிமுகம்!

கூகுள் மெசேஜஸில் புதிய பாதுகாப்பு அம்சங்கள் அறிமுகம்!

ஆண்ட்ராய்டு சாதனங்களுக்கு வழங்கப்படும் கூகுள் மெசே ஜஸ் (Google Message) ஆப்பில், பய னர்களின் பாதுகாப்பை மேம்படுத்தும் நோக்கில் 5 புதிய அம்சங்களை கூகுள் நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது. அபாயகரமான லிங்குகள் வரும் மெசேஜ்கள் பற்றிய எச்சரிக்கை கொடுப் பது, உணர்ச்சிவயப்படக்கூடிய உள்ள டக்கம் கொண்ட மெசேஜ்களை ப்ளர்  (Blur) செய்தும், அது குறித்த எச்சரிக்கை கொடுப்பது, வேலைவாய்ப்பு மற்றும் பொருட்கள் விநியோகம் தொ டர்பான மோசடிகளை கண்டறி தல், பயனர்களின் காண்டாக் ட்களை சரிபார்ப்பது (Verifi cation of contact), சர்வதேச ஸ்பேம் மெசேஜ்களை (Inter national Spam Messages) மறைப்பது ஆகிய 5 புதிய அம்சங்கள்  அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. இந்த அம்சங்களில் பெரும்பாலா னவை இன்னும் பரவலாகக் கிடைக்க வில்லை என்றாலும், சில குறிப்பிட்ட  நாடுகளுக்கு மட்டுமே வழங்கப்பட்டு உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. விரைவில் அனைத்து பய னர்களுக்கு இந்த அம்சங்கள் வழங் கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

டிஜிலாக்கர் செயலி பற்றி தெரியுமா?

டிஜிலாக்கர் (DigiLocker) செயலி, ஒன்றிய மின்னணு  மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தால் (MeitY) உருவாக்கப்பட்டது. இதில் டிரைவிங் லை சென்ஸ், ஆதார் உள்ளிட்ட முக்கிய ஆவணங்களையும், சான்றிதழ்களையும் சேமித்து வைத்துக்கொள்ளலாம். இந்த செயலி ஒரு கிளவுடாக செயல்படுகிறது. டிஜிட்டல்  முறையில் வைத்துக் கொள்ளலாம். இந்த செயலி,  ஆண்ட்ராய்ட், ஐ.ஓ.எஸ் உள்ளிட்ட இயங்குதளங்களுக்கு வழங்கப்பட்டுள்ளன.

டிஜிலாக்கரில் டாக்குமெட்களை பதிவேற்றம் செய்வது எப்படி? 

1) முதலில் டிஜிலாக்கர் டவுன்லோடு செய்து, மொபைல் எண்ணை உள்ளீடு செய்தால், அதற்கு வரும்  OTP உதவியுடன் யூசர் நேம் மற்றும் பாஸ்வேர்டை கொண்டு, புதிய கணக்கை உருவாக்க வேண்டும். 2) பின்னர், அதனுடன் ஆதார் எண்ணை இணைத்து,  டிஜிலாக்கரின் மற்ற சேவைகளையும் நம்மால் பயன் படுத்திக்கொள்ள முடியும். 3) பின் Pull Partner Documents என்பதை தேர்வு  செய்து அங்கு பதிவேற்றம் செய்ய இருக்கும் ஆவணங்கள்  மற்றும் அதன் வகைகள் குறித்த விபரங்களை உள்ளீடு  செய்தால், உதாரணமாக  டிரைவிங் லைசென்ஸ் நம்பரை  நாம் உள்ளீடு செய்கையில், டிஜிலாக்கர் அதனை சாலை போக்குவரத்துத் துறை ஆவணங்களுடன் அதை  ஒப்பிட்டுப் பார்த்து, விவரங்கள் சரியாக இருக்கும் பட்சத்தில் பதிவேற்றம் செய்துவிடும்.

இனி புதிய காண்டாக்ட்களை வாட்ஸ்அப்பிலே சேமிக்கலாம்!

புதிய காண்டாக்ட்களை (Contacts) வாட்ஸ்அப்பில் மட்டுமே சேமிக்கும் அம்சத்தை மெட்டா நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த அம்சம் மூலம் பயனர்கள்,  வாட்ஸ்அப்பின் கிளவுட் சேமிப்பில் நேரடியாக தங்களின் புதிய காண்டாக்ட்களை சேமிக்க முடியும். இதனால் பயனர்கள் செல்போனை மாற்றினாலோ அல்லது  தொலைந்து போய்விட்டாலோ, சேமிக்கப்பட்ட காண்டாக் ட்களை சுலபமாக அணுகக் கூடிய தாக இருக்கும். அதேபோல், பய னர்களின் யூசர்நேம் (username) ஆக வும் காண்டாக்ட்களை சேமித்துக் கொள்ளலாம். வாட்ஸ்அப் பயனரின் தரவு களைப் பாதுகாக்க Identity Proof Linked Storage (IPLS) என்ற புதிய  குறியாக்கப்பட்ட சேமிப்பு அமைப்பு செயல்படுத்தப்பட்டுள்ளது.