tamilnadu

img

கன்னையா குமார் மீது சங்பரிவார் கும்பல் தாக்குதல் முயற்சி

முன்னாள் ஜே.என்.யு மாணவர் சங்க தலைவரும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் செயற்குழு உறுப்பினருமான கன்னையா குமார் மீது சங்பரிவார் கும்பல் தாக்குதல் நடத்த முயற்சித்துள்ளது.

முன்னாள் ஜே.என்.யு மாணவர் சங்க தலைவரும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் செயற்குழு உறுப்பினருமான கன்னையா குமார், மத்திய பாஜக அரசு கொண்டுவந்த குடியுரிமை திருத்தச் சட்டம், என்.ஆர்.சி, என்.பி.ஆர் ஆகியவற்றுக்கு எதிராக குரல் கொடுத்து வருகின்றார். இந்நிலையில், பீகார் மாநிலம் சுபாலில் நேற்று நடைபெற்ற ஒரு பேரணியில் கலந்து கொண்ட கன்னையா குமார், பின்னர் சஹர்சாவை நோக்கி சென்று கொண்டிருந்த போது, சங்பரிவார் கும்பல் அவரது வாகனத்தின் மீது கல் எரிந்து தாக்குதல் நடத்தியது. இதில், கன்னையா குமாருக்கு எந்த காயமும் ஏற்படவில்லை. ஆனால், 2 வாகனங்கள் சேதமடைந்ததுடன், ஓட்டுனர் ஒருவரும் காயமடைந்தார். 

இது கடந்த நான்கு நாட்களில், கன்னையா குமார் மீது நடத்தப்படும் இரண்டாவது தாக்குதல் ஆகும். இந்நிலையில், இந்த தாக்குதல் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.