tamilnadu

img

பசுமாடுகளை உற்பத்தி செய்ய புதிய தொழிற்சாலை!

நாக்பூர்:
பசு மாடுகளை மட்டுமே உற்பத்தி செய்யும் தொழிற் சாலைகள் அமைக்கப்பட உள்ளதாக, மத்திய பாஜக அமைச்சர் கிரிராஜ் சிங் தெரிவித்துள்ளார்.மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரில், ‘மதர் டெய்ரி’ நிறுவனத்தின் விழாவில், கிரிராஜ் சிங் கலந்துகொண்டு உரையாற்றியுள்ளார். அப் போதுதான் இவ்வாறு அவர்கூறியுள்ளார்.“வரும் காலங்களில் பாலினம் உறுதிப்படுத்தப்பட்ட விந்தணுங்கள் மூலம் பசு மாடுகள் மட்டுமே பிறப்பது உறுதி செய்யப்படும். இதற்காக, தொழிற்சாலை உருவாக்கப்படும். 2019-2020ஆம் ஆண்டுகளில் பாலினம் உறுதிப்படுத்தப்பட்ட 30 லட்சம்விந்தணுக்கள் வழங்கப்பட் டுள்ளன. இதுவே 2025-ஆம்ஆண்டுகளில் 10 கோடி விந்தணுக்கள் வரை வழங்கப்படும். அது, 10 கோடி பசுமாடுகள்உருவாவதை உறுதிப்படுத் தும். அதன் மூலம், விவசாயிகள் வருமானம் இரட்டிப்பாகும்.‘4 எம்ப்ர்யோ’ தொழில்நுட்பத்தின் மூலம் பசு மாடுகள் அதிகம் பால் கறப்பதை உறுதிப்படுத்த முடியும். இந்த தொழில்நுட்பத்தின் மூலம் 20 லிட்டர் வரை பசு மாடுகள் பால் கொடுக்கும். இது ஒரு புரட்சியாக இருக் கும்” என்று கிரிராஜ் சிங் குறிப்பிட்டுள்ளார்.